வந்த 7 பேரும் வழியில் வந்த தேவாவின் தந்தையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் பாய்ந்தார் கைலாசநாதன்
”யோவ் என்னய்யா ஆச்சி உங்களுக்கு, எதுக்கு இப்ப என் வீட்ல தகராறு பண்றீங்க” என கேட்க வந்தவர்களோ சிரித்துக் கொண்டே
”நாங்க வந்தது என்னவோ கேள்வி கேட்கத்தான் ஆனா உங்க மருமகளே எங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டாங்க, இனி நாங்க பிரச்சனை பண்ணலை. அந்த காலேஜ் ஓனர்கிட்டயே நாங்க பேசிக்கிறோம்” என ஒருவர் சொல்ல அதற்கு அவரோ
”மருமகளா” என வியப்பாக கேட்க
”ஆமாம் இப்பதான் நாங்க பார்த்தோம், உங்கம்மா கூட சொன்னாங்க எங்க தேடினாலும் இப்படியாப்பட்ட ரத்தினம் கிடைக்காதுப்பா, அப்படியே உங்கம்மாவை போல துணிச்சலா பேசினாப் பாருங்க, ஆஹா நாங்களே அசந்துட்டோம். தேவா கொடுத்து வைச்சவன், அவனைப் போலவே ஒருத்தி கிடைச்சிருக்கா வாழ்த்துக்கள் கைலாசம்” என ஒருவர் சொல்ல மற்றவர்
”உங்க மேல எங்களுக்கு கோபம் இருந்தாலும் தேவான்னா எங்களுக்கு உசுரு. அவன் மேல மதிப்பு அதிகம் வைச்சிருக்கோம். கல்யாணத்துக்கு நீங்க கூப்பிடலைன்னாலும் நாங்களே வந்து எச்சி இலையை எடுத்து போடுவோம் சரி நாங்க கிளம்பறோம்” என சொல்லி அவர்கள் சென்றுவிட கைலாசம் குழம்பினார்.
நேற்று அவர் சரண்யாவை காணவில்லை. காரணம் அவர் வந்ததே மிட் நைட் என்பதால் பார்க்கவில்லை காலையிலும் அவர் கவனிக்கவில்லை. மற்றவர்கள் பேசியதை வைத்துக் கொண்டு தன் காரில் ஏறி அவசரமாக வீட்டுக்குச் சென்றார். அங்கு தன் தாயிடம்
”அம்மா” என அழைக்க அவரோ
”வாடா வா” என்றார் அவர் பக்கத்தில் சரண்யா இருக்கவே சந்தேகமாக அவளைப் பார்க்க