(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அப்படிங்கற சரி தேவாகிட்ட சொல்லி வாங்கிடு, அவன்தானே கூட்டிட்டு வந்து தங்க வைச்சான், அவனும் கொஞ்சம் இந்த வீட்டுக்காக வேலை செய்யட்டும்” என சொல்லிவிட்டு சேதுப்பிள்ளையுடன் வேற விசயங்களைப் பேசிக் கொண்டு சென்றுவிட சரண்யாவிற்கு காய்ச்சலே வந்தது. அவள் உடனே மணியைப் பார்த்தாள். மணி 12.30 என காட்டவே அதிர்ந்தவள் பாட்டியிடம்

   

”பாட்டி நான் வெளிய கடைக்குப் போகனும்”

   

”கடைக்கா என்ன கடைக்கு”

   

“இல்லை வர்ற அவசரத்தில துணிமணி அதிகம் கொண்டு வரலை, ட்ரஸ் வாங்கனும் அதான்.” என அவள் சொல்ல அவருக்கு பாவமாகிப் போனது

   

”அவ்ளோதானே சரி சரி சாப்பிட்டு போலாம் இரு, தேவா வரட்டும் அவன் கூட போவ”

   

“இல்லை நான் தனியாப் போறேன்”

   

“அட ஏன் பயப்படற உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க, தேவா வரட்டும் நான் அவன்ட்ட சொல்றேன் அப்படியே உங்க கல்யாணத்தை பத்தியும் பேசறேன்”

   

“அய்யோ கல்யாணமா வேணாம்”

   

“ஏம்மா வேணாம்”

   

“இல்லை எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவனுக்குப் பிடிக்காது”

   

“ஓ அதானா நீ ஓடிவந்திருக்க, நீ கவலையேபடாத நானே அவன் கழுத்தை பிடிச்சி விரட்டிடறேன். சரியா” என சொல்ல சரண்யா தன் கழுத்தை உடனே தடவிக்கொள்ள அதைப்பார்த்து சிரித்தவர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.