”யார் நீங்க எதுக்காக இப்படி சத்தம் போடறீங்க” என கேட்க அவர்களோ
”இந்த நியாயத்தை நீங்களே கேளுங்க, உங்க பையன்ங்கள் செய்றது கொஞ்சமும் சரியில்லை. இந்த ஊர்ல காலேஜ் ஹாஸ்டல் கட்ட எல்லாருக்கும் ஆர்டர் வந்துச்சி. ஆனா யாருக்கும் தராம வெளியூர்க்காரங்களுக்கு அந்த ஆர்டர் கொடுக்கப் போறதா கேள்விப்பட்டோம். உள்ளுர்காரங்களை விட்டு வெளியூர்காரங்களை வரவழைச்சா எங்களை இந்த ஊர்ல யார் மதிப்பாங்க சொல்லுங்க”
“சரி இதை ஏன் இங்க வந்து சொல்றீங்க”
“இங்கதான் சொல்லனும் அந்த வெளியூர்க்காரனை ஏற்பாடு பண்ணதே உங்க பெரிய பையன்தான். அவரோட வரவழைப்புல வந்தவனை பத்திரமா தங்க வைச்சி விருந்து உபசாரமா செய்றீங்க” என இன்னொருவன் பேச
”இதப்பாருங்க இந்த வேலைகளை பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. வீட்ல ஆம்பளைங்க இல்லை, அவங்க வேலை செய்ற இடத்தில போய் பேசுங்க இங்க ஏன் வர்றீங்க”
“காரணம் இருக்கு வெளியூர்க்காரனை வீட்டுக்குள்ள விட்டது உங்க தப்பு, அவனை வெளிய விரட்டுங்க நாங்க பார்த்துக்கறோம்” என சொல்ல அந்நேரம் சரண்யா அங்கு வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டு அதிர்ந்தாள்.
”அப்படி இங்க யாரையும் தங்க வைக்கலை புதுசா யாரும் வரல”
”இதை எப்படி நம்பறது” என கேட்க தேவாவின் தாய் உடனே தன் கணவருக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட அதற்குள் சரண்யாவே களத்தில் குதித்தாள். வந்தவர்களின் முன் தைரியமாக நின்றாள்
”இதப்பாருங்க எதுக்காக இப்படி சத்தம் போடறீங்க, உங்களுக்குள்ள ஒற்றுமை இல்லாத காரணத்தாலதான், வெளியூர்க்காரனை வரவழைச்சாங்க தப்பு உங்க மேல, இப்ப வந்தவனை