என சொல்லி சுற்றி முற்றி பார்த்தான். காக்கா குருவி தவிர அங்கு மனித நடமாட்டம் இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்தவன் கீர்த்தனாவைப் பார்த்தான்.
அவளோ இம்முறை அந்த செல்போனை எடுத்தே ஆக வேண்டும் என நினைத்து அவனிடம் நெருங்கி வந்து அவனது சட்டையில் கைவைத்திருந்த அவனது கையை இரு கையாலும் விலக்க முயற்சி செய்ய அவனோ ஒரு கையால் அவளது இடுப்பை வளைத்து இழுத்து தன் மடியில் அமர வைக்கவும் அதிர்ந்தவள் அடுத்த நிமிடம் வெட்கத்தால் முகத்தை இருகையாலும் மூடிக் கொண்டதும் அவனுக்கு சிரிப்பே வந்தது.
இந்த அறிய காட்சியை தாஸ் தவிர வேறு யாருமே காணவில்லை. தேவாவை தேடி அலைந்து இறுதியில் அவனை அந்த நிலையில் கண்டுபிடிக்கவும் தலையில் கை வைத்து யாராவது வருகிறார்களா என சுற்றும்முற்றும் பார்த்து விட்டு எப்படி தேவாவிடம் செல்வது அங்கு கீர்த்தனா இருக்கிறாளே என நினைத்து மண்டை காய்ந்தவன் நேற்று கீர்த்தனா தன்னை அண்ணா என அழைத்தது நினைவுக்கு வரவே அண்ணன் என்ற முறையில் நடக்கும் தவறை தட்டிக் கேட்க எண்ணி அவ்விடத்தை விரைவாக வந்தடைந்து தேவனின் முன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து கோபமாக முறைக்க அவனைக் கண்டதும் பயந்த தேவனோ மடியில் இருந்தவளை தரையில் அமர வைத்துவிட்டு எழுந்து நின்றான்.
திடீரென தான் தரைக்கு வரவும் கைகளை விலக்கி சுற்றி முற்றி பார்க்க அங்கு தாஸ் கோபமாக இருப்பதைக் கண்டு பயந்து எழுந்து நின்றாள் கீர்த்து.
”அண்ணா அது வந்து” என இழுத்து ஈனக்குரலில் பேச தாஸ் அவளிடம் சைகை செய்ய அதை அப்படியே தேவா அவளிடம் சொன்னான்
”என்ன இது பட்டப்பகல்ல, கோயிலுக்கு வந்த இடத்தில இப்படியா இருக்கறது, யாராவது பார்த்தா உன்னைத்தான் தப்பா நினைப்பாங்க நீ என்ன சொன்ன என்னை நீ அண்ணான்னு சொன்ன அந்த உரிமையில சொல்றேன் இப்பவே வீட்டுக்கு போ” என தேவா சொல்லிவிட்டு தாஸிடம்
”டேய் தாஸ் அவள் மேல தப்பில்லை, நான்தான் அப்படி நடந்துக்கிட்டேன் அவள் மேல நீ ஏன் இவ்ளோ கோபப்படற” என கெஞ்ச அவனோ அவனிடம்