”உனக்கு எதுதான் புரியுது. அடேய் நேத்து தேவா இந்த பொண்ணை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான் தெரியுமா” என கேட்க அவன் தெரியும் என்பது போல் தலையாட்ட
”ஆமாம் என்னத்த தெரியும் உனக்கு, நம்ம தேவாவுக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு, அதான் அவள் வீட்ல ஒத்துக்கலைன்னதும் இவளை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்கான்.” என சொல்ல தாஸ் குழம்பி தலையை சொறிந்துக் கொண்டே பாட்டியை பாவமாகப் பார்க்க
”உனக்கு எல்லாம் விளக்கமா சொல்லனும். இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம் வேணாம்னு தேவா சொன்னதுக்கு காரணம் இதுதான்னு புரிஞ்சிக்கிட்டேன். அவனுக்கு இந்த சரண்யாவைத்தான் பிடிச்சிருக்கு, அதனாலதான் அவளை கூட்டிட்டே வந்து இங்க விட்டிருக்கான். இதைப்பத்தி அவன் கிட்ட கேட்க நினைச்சேன் அதுக்குள்ள கோயிலுக்கு போயிட்டான் வரட்டும் நான் அவன்ட்ட பேசி நல்ல நாள் பார்க்கறேன்” என கேட்க அவன் எதற்கு என சைகை செய்ய
”எதுக்கா தேவாவுக்கும் சரண்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ல அதுக்குத்தான்” என சொல்ல தாஸ் உட்சபட்ச அதிர்ச்சியில் விழிகள் விரிய சிலையாக நின்றான். அவனது நிலையைக் கண்டு சிரித்த பாட்டியோ
”என்னடா அதிர்ச்சியாயிட்ட உனக்கும் இந்த கல்யாணத்துல சந்தோஷம்தானே” என கேட்க அவனோ இல்லை என்பது போல பலமாக தலையாட்ட
”ஏன்டா இல்லைங்கற” என பாட்டி கத்தவும் அவனோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஏதேதோ சைகைகள் செய்ய ஒன்று கூட பாட்டிக்கு புரியாமல் திகைத்துவிட்டு
”அடப் போடா நீ சொல்றதே எனக்குப் புரியலை எனக்கு உள்ள வேலையிருக்கு, மருமகள் வந்திருக்கா அவளுக்கு தேவையானதை செஞ்சி வைக்கனும்ல, கல்யாணம் ஆகற வரைக்கும்தான் அவளை என்னால பார்த்துக்க முடியும் கல்யாணம் ஆனா தேவாதான் பார்த்துக்கனும் கிடைக்கற வாய்ப்பை நான் பயன்படுத்திக்கிறேன்” என சந்தோசமாகச் சொல்லிவிட்டு அவர் வேறு பக்கம் சென்றுவிட தாஸுக்கு தலையே வலித்தது. தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் தாத்தா வந்தார்