வரும் போது முற்றத்தில் பாட்டி கோசலை சரண்யாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை எதேச்சையாக கேட்டு சடனாக நின்று அவ்விடம் வந்தான்
”நீ ரொம்ப அழகா இருக்கம்மா அதனாலதான் என் பேரன் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கான், நீ கவலையேப்படாத நாங்க எல்லாரும் இருக்கோம் நாங்க பார்த்துக்கறோம்” என சொல்ல சரண்யாவிற்கு குழப்பமே வந்தது
”நீங்க என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே”
“அட இதுல புரியலைன்னு சொன்னா என்ன அர்த்தம், உன் வீட்டை விட்டுட்டு எதுக்காக தேவன்கூட வந்த”
”அது இந்த வீட்ல தங்கத்தான்”
“அதைத்தான் நான் சொன்னேன்” என அவர் சொல்ல அதைக் கேட்டு சரண்யா சிரிக்கவும்
”சரி சரி நீ போய் டிபன் சாப்பிடு போம்மா” என பாசமாகச் சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு செல்லவும் பாட்டியை பிடித்தான் தாஸ்
”என்னடா நீ இங்க இருக்க கோயிலுக்கு தேவாவோட போகலையா” என கேட்க அதற்கு
”அந்த பொண்ணு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்பது போல் சைகை செய்த தாஸிடம்
”இதுல நினைக்க என்ன இருக்கு. அமைதியான பொண்ணு, அடக்கமா இருக்கு, அழகாவும் இருக்கு, தேவாவை போலவே இவளும் இன்ஜினியர்தான் படிச்சிருக்காளாம். படபடன்னு பேசலைன்னாலும் நல்ல விதமா எல்லோர் கூடவும் பேசறா, பழகறா, தேவாவோட எல்லா விருப்பத்துக்கும் நான் மதிப்பு கொடுத்திருக்கேன். இதுக்கும் சேர்த்துதான்” என சொல்ல தாஸ் குழம்பினான்
”என்ன சொல்றீங்க புரியலை” என்பது போல் சைகை செய்ய