(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 01 - சசிரேகா

  

முன்னுரை

   

இரு பெண்களால் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் அவர்களால் அவன் தன்னுடைய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அவனுக்கு பிடித்த உறவுகள் அவனது தொழில்களையும் இழந்துவிடுகிறான். அவர்களை இறுதியில் மறுபடியும் அடைந்து தொழிலிலும் எவ்வாறு உயர்கிறான் எப்படி அந்த இரு பெண்களிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றி தன் காதலை உணர்த்தி அவளை கைபிடிக்கிறான் என்பதே இக்கதையாகும். 

   

பாகம் 1

   

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு டவுனில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையார் கோயில்

   

”சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்னமாயே.... ” கோயிலில் ஐயர் மந்திரங்கள் சொல்லி கடவுளுக்கு ஆரத்தி எடுத்து முடித்து மக்களிடம் வந்தார். அங்கு தேவநாதன் வரிசையில் நின்றிருந்தான். அதைப் பார்த்த ஐயரோ

   

”ஐயா நீங்களா முன்னாடி வந்து நில்லுங்கோ வாங்கோ” என 50 வயது மதிக்கத்தக்க கோயில் ஐயர் 30 வயது மதிக்கத்தக்க தேவநாதனுக்கு மரியாதை கொடுத்து அழைத்தார்.

   

”இருக்கட்டும்” என கம்பீரமான குரலில் அதட்டலாக சொல்ல அதோடு ஐயரும் அமைதியாகி முதலில் அவனிடம் வந்து தீபாராதனையை காட்ட அவனும் தொட்டுக் கும்பிட்டு 500 ரூபாய் தாளை போட ஐயருக்கு மிகவும் மகிழ்ச்சியாகிப் போனது. அவசரமாக அதோடு கர்பகிரகத்திற்குச் சென்றவர் சாமிக்கு போட்ட மாலையை கொண்டு வந்து அவன் கழுத்தில் போட பார்க்க அவன் தடுத்தான்

   

”வேணாம் நான் ஒண்ணும் கடவுள் இல்லை”

   

“ஆனா எங்களை பொறுத்தவரைக்கும் நீங்க கடவுள்தானே” என ஐயர் சொல்ல அவனோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.