(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

கண்டு ஒர்க்ஷாப் ஒன்றை ஆரம்பித்தான். அதற்கும் தேவன் ஒர்க்ஷாப் என்றே பெயர்வைத்தான். அதற்கு காரணம் உள்ளது. 

   

நாதன் என பெயர் வைக்கலாம் என்றால் அவனது குடும்ப பெயர் நாதன் என்பதால் அந்த பெயரில் ஏற்கனவே அவனது தந்தை நாதன் குரூப்ஸ் என பெயர் வைத்து கன்ஸ்டரக்ஷன் வேலை செய்வதால் தேவநாதன் தனக்கான தொழில்களில் பெயரை தேவன் என வைத்துக் கொண்டான். 

   

அந்த ஒர்க் ஷாப்பை விக்ரமின் பொறுப்பில் விட்டான் கட்டுமான வேலையில் சாரல் போல பணம் வந்தாலும் ஒர்க்ஷாப்பில் மிதமான மழை போல பணம் வந்தாலும் லாரி ட்ரான்போரட்டில் மட்டும் அவனுக்கு புயல் மழை போல பணம் கொட்டியது. அவனை விட அவனது தந்தை மற்றும் சித்தப்பாவிற்கு தொழிலில் லட்சக்கணக்கில் பணம் புழங்கும். அதற்காக தேவனை யாரும் இளப்பமாக நினைப்பதில்லை. ஒரே நேரத்தில் 3 பிசினசுக்கும் அவனே தலைமை தாங்கி நடத்துபவன். 

   

சிறு வயதில் ரொம்ப சேட்டைக்காரனாக இருந்த தேவனை வீட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அனைவரிடம் நல்மதிப்பை பெறாமல் இருந்த காரணத்தாலும் அவனால் சண்டைகள் சச்சரவுகள் வர தொடங்கியது அதற்காக அவனை அப்போது அனைவரும் திட்டுவார்கள். 

   

இப்போது அவனைக் கண்டால் அனைவரும் பயந்து ஒதுங்குவார்கள், அதற்காக அவன் கெட்டவன் என்று அர்த்தம் இல்லை உண்மையானவன் அவனின் நேர்மைக்குப் பயந்து அனைவரும் தள்ளி நின்றார்கள். 

   

தன் நண்பன் விக்ரமனுடன் சேர்ந்து ஒர்க்ஷாப் வேலைகளையும் கற்றுக் கொண்டான். அதற்காகவே வீட்டில் இருப்பதை விட அவனுக்கு அங்கு இருப்பது பிடித்திருந்தது. காரணம் அவனது குணத்திற்கு அந்த இடமும் லாரி ட்ரான்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் டிரைவர்கள், க்ளீனர்கள், வேலையாட்கள் ஒத்துப்போனார்கள். 

   

ஆரம்பத்தில் 3 லாரிகள் வாங்கியவன்  தன் குடும்ப நபர்களின் தேவைக்காக 50 லாரிகளை வைத்து நடத்தினாலும் அந்த லாரிகளையும் அதில் வேலை செய்பவர்களையும் வேலை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.