(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

செய்வதைக் கண்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட்டு தாத்தாவின் சொத்துக்களைப் பிரித்தனர். அதில் எதுவும் தேவநாதனுக்கு வரக்கூடாது என பார்த்துக் கொண்டார்கள்.

   

அவனது தாத்தா வைத்தியநாதன் விவசாயம் செய்தவர், கூடவே நாட்டு மருந்துவத்தில் புகழ் பெற்றவர். அவருக்கு 2 மகன்கள் முதல் பையன் கைலாசநாதன், அவரது மனைவி சிவகாமி, இவர்களுக்கு பிறந்தவன் தேவநாதன் மற்றும் சூர்யநாதன். அடுத்து 2வது பையன் விசுவநாதன் அவரது மனைவி கௌரி, மகன் சுவாமிநாதன்.

   

தாய்மாமன் சேதுப்பிள்ளை, மனைவி சுந்தரி, அவருக்கு 3 பெண்கள் தாரா எம்பிஏ படிப்பு படிக்கிறாள், மந்த்ரா தேவநாதனுக்கு இவளை திருமணம் செய்து வைக்கும் ஆசையில் அவனை போலவே கட்டிடம் கட்டும் இன்ஜினியரிங் படிப்பு படிக்க வைத்தார், 3வது சுப்ரஜா 3வது வகுப்பு, தேவநாதனுக்கு 3 முறைப்பெண்கள் இருந்தாலும் அவனுக்குப் பிடித்தவள் என்றால் அது சுப்ரஜாதான். அவனது தம்பி சூர்யநாதனுக்கு தாராவை சிறுவயதில் பேசி முடித்துவிட்டதால் அவன் இன்ஜினியரிங் படிப்பு முடிந்த கையோடு தன் தந்தையுடன் பில்டிங் கன்ஸ்டரக்ஷன் தொழிலில் இறங்கினான்.

   

சுவாமிநாதனை மந்த்ரா மறைமுகமாக காதலித்தாலும் அதை யாரிடமும் ஏன் காதலனிடமும் இருந்தே மறைத்து வந்தாள். காரணம் அந்த வீட்டில் மிகவும் பயந்த வெகுளியான பெண் மந்த்ராதான். தேவநாதனின் பாட்டி கோசலை இன்று வரை வீட்டு நிர்வாகம், கொத்துசாவி, பணம் வரவு செலவு அனைத்தும் அவரது கையில் உள்ளது. தேவநாதனின் அதிகார குணம் அவரிடம் இருந்து வந்தது. தாத்தா பாட்டியின் வளர்ப்பில் தேவநாதன் வளர்ந்த காரணத்தால் அந்த வீட்டில் தேவநாதனை யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவர்கள் அடுத்த நொடி அந்த வீட்டில் இருக்கக் கூடாது இதுதான் சட்டம், அந்தச் சட்டத்தை இயற்றியது பாட்டி கோசலை.

   

3 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அவனது வீடு முன்புறம் பெரிய மைதானம் போல காலிமனை, அதில் வீட்டில் இருப்பவர்களின வண்டிகள் நிறுத்தினார்கள், கூடவே தேவன் தன் சொந்தமான லாரிகளில் எமர்ஜன்சிக்காக 10 லாரிகளை நிறுத்தி வைத்திருப்பான். தேவையென்றால் மட்டுமே அந்த லாரிகளை எடுப்பான். அதை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்வான். வெளியாட்கள், வெளி வியாபாரிகள் லாரிகள் தேவை என கேட்டால் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.