(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

அந்த ஊரில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்று கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் கட்டித்தர முடிவு எடுத்து உள்ளுரில் இருப்பவர்களை அணுகினார்கள். அதில் நாதன் குரூப்ஸ் முதலிடம் வந்தது. ஆனால் அவர்களது எதிரிகளால் கல்லூரி நிர்வாகம் அல்லல்படவே வெளி ஊரிலிருந்து ஹாஸ்டல் கட்ட ஆட்களை வரவழைத்தார்கள் அதன் நிர்வாகிகள். அதன்படி சென்னையில் இதற்கென்றே கன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி ஓனர் ராஜமாணிக்கத்தை அணுகி ஒரு வழியாக அவரின் வழியில் வந்த அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்தார்கள்.

   

அவன் பெயர் சரண். அவனை பிக்கப் செய்ய மாமன் சொல்லவும் தட்டாமல் அதை செய்ய வந்துவிட்டான் தேவனும் தாஸும் ஏர்போர்ட்டிற்கு. தன் தாய் தன்னை வெறுத்தாலும் சுப்ரஜாவின் தந்தை என்ற முறையிலும், தாய்மாமனின் கெட்ட எண்ணம் அறியாமல் அவரது நல்ல செயல்களை கண்டு அவருக்காக அனைத்தும் செய்தான்.

   

ஒலிப்பெருக்கியில் விமானம் வந்திருப்பதாக தகவல் வந்து அரை மணி நேரமாகியும் சரண் வராமல் போகவே தாஸ் அவசரமாக தேவன் முன்பு நின்றான். அவனது முகத்தை வைத்தும் சைகையை வைத்தும் புரிந்துக் கொண்டான்

   

”என்னடா சரண் வரலையா” என கேட்க அவனும் ம் என தலையாட்டவும் 

   

”சரி வா விசாரிப்போம்” என சொல்லி அவனை அழைத்துக் கொண்டு செக்கிங் ஏரியாவிற்குச் சென்றான் தேவன்

   

”ஹலோ ஒரு நிமிஷம், பேர் சரண் இந்த ப்ளைட்லதான் வருவாங்க ஆனா இன்னும் வரலை கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க” என சொல்ல அவர்களும் பார்த்தார்கள்

   

”சரண்ங்கற பேர்ல யாரும் இல்லையே சார்” என சொல்ல தேவன் உடனே தன் மாமன் சேதுப்பிள்ளைக்கு போன் செய்தான்.

   

”மாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.