இல்லாமல் நல்லவளாக வளர்ந்தாள். தேவனுக்கு பிடித்தவள் என்ற காரணத்தால் பாட்டி கோசலை அவளை தன்னுடன் வைத்துக் கொண்டு வளர்த்தார்.
அந்த வீட்டில் தேவன் மீது பயமும் மதிப்பும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவனை திமிர் பிடித்தவனாகவும் வெறுப்பாகவும் பார்ப்பார்கள். அவர்களைத் தாண்டி அவனை மனிதனாக பார்ப்பது அவனது தாத்தாவும் பாசத்தை காட்ட பாட்டியும் இருந்தார்கள். தாயின் தேவையை கூட பாட்டியே எடுத்துக் கொண்டதால் தாயிடம் ஒட்டாமல் இருந்துவிட்டான் தேவன். அவருக்கும் தேவன் பிறந்தவுடன் ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து கணவரிடம் திட்டும் அடியும் வாங்கியதிலிருந்து அவனை வெறுக்க ஆரம்பித்தார். காரணம் தெரியாமல் வந்த வெறுப்பு நாளடைவில் சூர்யாதான் தனது ஒரே மகன் என்ற அளவு மாறியது அதற்காக என்றுமே தேவன் கவலையடைந்ததில்லை.
எந்நேரம் சிமெண்ட், ஜல்லி, கல் போன்ற சரக்குகள் ஏற்ற லாரி தேவையோ அப்போது அப்பாவும் சித்தப்பாவும் தேவனுக்கு போன் செய்தால் போதும் சில நிமிடங்களிலேயே வேலைகள் முடிந்துவிடும். எந்த லாரி ட்ரைவர் எப்படிப்பட்டவன், அவனிடம் எந்த வேலையை தந்தால் விரைவாக செய்துவிடுவான் என்பது டிரைவர்கள் மனதில் ஓடும் சிந்தனைகள் வரை தேவனுக்கு மனப்பாடம்.
வேலையில் இருந்த ட்ரைவர்களும், க்ளீனர்களும் தேவனை கடவுளாக பார்த்தார்கள். பல பேருக்கு தேவன் என்றுதான் தெரியும் நாதன் என்பது வெறும் குடும்ப பெயர் அவ்வளவே, அவனுடைய நண்பர்களுக்கு மட்டும் கூட தேவன் என்றே தெரியும் அனைவரும் அவனை தேவன் என்றும், அண்ணா என்றும், தம்பி என்றும் அழைத்தே பழகிவிட்டார்கள். அவனது பேங்க் அக்கவுண்ட்டில் லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் அதை வைத்து எந்த கெட்ட வழிக்கும் செல்லாமல் சிக்கனமாக தன் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டவன்.
அவனுடைய ட்ரான்ஸ்போரட்டில் இருக்கும் லாரிகளைத் தவிர வெளியிலிருந்து கூட ரிப்பேருக்கு பல லாரிகள் வரும். அனைத்திற்கும் பாரபட்சம் இன்றி பில்போட்டு பணம் வசூலிப்பான். இப்படியாக தேவநாதனின் குடும்பம் மற்றும் தொழில் வரலாறு அவனை பற்றிய வரலாறு முடித்த கையோடு இன்று அவனுக்கு அவனது மாமன் சேதுப்பிள்ளை தந்த வேலையை செய்யச் சென்றான்.