(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

”என்னப்பா ஆள் வந்தாச்சா”

   

“எங்க சரண்ங்கற பேர்ல யாரும் வரலையே இங்க செக்கிங் ஏரியால கூட விசாரிச்சிட்டேன்”

   

”தேவா நல்லா தேடிப்பாரு, அங்கதான் இருப்பாரு, பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி அது, ஹாஸ்டல் கட்ட நமக்கு வாயப்பு கிடைக்கலை ஆனா, அவங்களோட சேர்ந்து செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கோம் அவரோட டீலிங் போச்சின்னா 1 மாசம் உழைப்பு வீணாயிடும் இதற்காக பல பேரை அடக்கி அமைதியாக்கி வைச்சிருக்கோம் இந்தா உன் அப்பாட்டயே பேசு” என சொல்ல

   

”மாமா வேணாம் நானே எப்படியாவது தேடி கூட்டிட்டு வரேன்” என சொல்ல 

   

தேவனும் அந்த விமான நிலையத்தையே சுற்றி முற்றி பார்க்க தூரத்தில் ஒருவன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு யாரையோ தேடுவது போல சுற்று முற்றும் பார்ப்பதைக் கண்டு போனில் மாமனிடம்

   

”மாமா ஒருத்தன் இருக்கான் அவன்தான்னு தோணுது”

   

“ஆளை பார்த்துட்டியா உனக்கு எப்படி அவரை தெரியும்”

   

“தனியா உட்கார்த்திருக்காரே அவராதான் இருக்கும்”

   

”தேவா பெரிய டீலிங் அது, 1 மாசம் அந்த ஹாஸ்டலுக்காக கஷ்டப்பட்டு அப்ரூவல்க்காக வந்திருக்காங்க அவர் மட்டும் சரின்னு சொல்லிட்டா போதும், நமக்கு 2 மடங்கு லாபம் கிடைக்கும் அவரை பத்திரமா கூட்டிட்டு வந்துடு அவருக்குன்னு ஓட்டல் ரூம் புக் பண்ணியாச்சி. அதுல தங்க வைச்சிடு ஓட்டல் தெரியும்ல”

   

”தேவா அவரான்னு பார்த்து கூட்டிட்டு வா அவர் கையில விசிட்டிங் கார்டு இருந்தா பாரு வேற எவனையாவது கூட்டிட்டு வரப்போற”“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.