(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

“இல்லை 30 மொழிகளை பேச கத்துக்கிட்டு என்ன லாபம், எழுத படிக்க தெரிஞ்சிருந்தா இந்நேரம் இவ்ளோ நேரம் காத்திருக்க வேண்டியிருக்காதுல்ல”

   

“நீங்க ஏன் இங்கிலீஷ்ல எழுதல?”

   

“இது மதுரை, தமிழ்நாடு, வர்றவங்க தமிழர்கள்ன்னு சொன்னாங்கன்னு தமிழ்ல எழுதியாச்சி”

   

“தப்பு உங்க மேலதான்” என சொல்ல தேவன் முறைக்க அதைக் கண்டு அவர்கள் உடனே

   

“சரி தப்பு எங்க மேலதான் போதுமா போலாமா” என சொல்லிக் கொண்டே சரணை பார்க்க அவனோ அங்கு நடப்பதை பாராமல் போனில் ஏதோ நோண்டிக் கொண்டிருக்கவே  

   

”இவங்கதானே சரண்” என கேட்க அவர்களும் ஆம் என அவர்கள் தலையாட்ட அவனிடம் கை நீட்டினான் தேவன்

   

”ஹலோ சரண்” என கத்த அவனிடம் எந்த மாற்றமும் இல்லை, செல்பொனை நோண்டவும் கோபமே வந்தது தேவனுக்கு சட்டென அவனது ஹெட்போனை காதிலிருந்து பிடுங்கவே அதிர்ந்தான் சரண். செக்யூரிட்டியும் கோபமாக அருகில் வர தடுத்தான்

   

”எதுக்கு கோபப்படறீங்க காதுல ஹெட்போன் இருந்தா எப்படி நான் பேசறது கேட்கும் அதான் பிடுங்கினேன்”

   

“எங்ககிட்ட சொல்லியிருக்கனும்” என ஒருவன் கோபமாக பேச தேவனோ இடுப்பில் கைவைத்துக் கொண்டு கோபமாக சரணை பார்க்க அவனோ அப்போதுதான் அவனை பார்ப்பதை போல பார்த்து வைத்தான். 

   

”பார்க்க சின்ன வயசு பையனாதான் இருக்கான் ஏம்பா தம்பி நீதானே சரண்” என கேட்க அவனும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.