அவன் அங்கு வந்தான் என்றே தெரியாமல் குழம்பி
”தேவநாதன் தேவான்னு கூப்பிடுவாங்க” என சொல்ல
”மிஸ்டர் தேவ். அரை மணி நேரம் கழிச்சி என் ரூமுக்கு வாங்க” என சொல்ல தேவநாதனோ தன் கையில் இருந்த கடிகாரத்தைக் கண்டான். மணி 11.15 என இருக்கவே பவித்ராவின் நினைவு வர சரணிடம்
”எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு, உங்களை போலவே இன்னொருத்தரை பிக்கப் பண்ணனும் நான் போகனும்” என சொல்ல
”ஓகே அந்த வேலையை முடிச்சிட்டு என்னோட ரூமுக்கு வாங்க மிஸ்டர்” என சொல்லிவிட்டு
அவன் முன்னாடி செல்ல பின்னாடி செக்யூரிட்டிகள் செல்லவும்
”தாஸ் முதல்ல மாமாவுக்கு போன் பண்ணி சரண் வந்த விவரம் சொல்லிடனும், சீக்கிரமா ரெயில்வே ஸ்டேஷன் போகனும் அங்க நம்ம விக்ரம் தங்கச்சியை கூட்டிட்டு வரனும் வா” என அழைத்துக் கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறி காரில் ஏறியவன் 15 நிமிடத்தில் எப்படியோ ரெயில்வே ஸ்டேஷன் அடைந்தான். அவனது காரில் அவனே செல்ப் ட்ரைவிங் செய்வது வழக்கம். திறமையாக வண்டி ஓட்டுபவன்.
ரெயில்வே ஸ்டேஷன் மணி 11.30
தேவநாதனும் தாஸும் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றார்கள். அதற்குள் ட்ரெயின் 15 நிமிடம் முன்னதாகவே வந்துவிட்டது.
”ட்ரெயின் வந்துடுச்சி போல இருக்கே, எப்படி அவளை தேடறது” என நினைத்துக் கொண்டே விக்ரமுக்கு போன் செய்தான்
”ஹலோ விக்ரம்”