(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

“சொல்ணா”

   

“உன் தங்கச்சியை தேடி வந்தேன். நாங்க வர்றதுக்குள்ள ட்ரெயின் வந்துட்டு போயிடுச்சி. இப்ப அவள் எங்கன்னு தெரியலை, நான் இங்க வெளிய கார் பக்கத்தில நிக்கறேன்னு அவள்ட்ட சொல்லி வெளிய வர சொல்லு”

   

“அப்பவே சொல்லிட்டேன் அண்ணா, ட்ரெயின் வந்துடுச்சின்னு போன் பண்ணா அப்பவே உன் கார் வந்தா நெம்பர் பார்த்து நிக்க சொல்லிட்டேனே”

   

”அப்படியா சரி நான் பார்த்துக்கறேன்”

   

“சரிண்ணா” என போனை வைக்கவும் தாஸை அழைத்துக் கொண்டு தேவநாதன் ரெயில்வே நிலையத்தை விட்டு வெளியே கார் பார்க்கிங் இடமான தன் கார் இருக்கும் இடத்தை நோக்கி வர அங்கு ஒரு பெண் கையில் பையுடன் நின்றிருந்தாள். 

   

கேரள பாணியில் சந்தன நிற பாவாடை தாவணியில் தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். அது இடுப்புக்கு கீழ் வரை தொங்கி அவளது பின்னழகை மறைத்திருந்தது. அவளைப் பார்த்தாலே கேரள பெண் என்று தோன்றும். சந்தன நிறத்தில் களையான முகவெட்டு, சிற்பி வடித்தானா இவளை இல்லை அந்த ப்ரம்மனே வடித்தானோ அவ்ளோ அம்சமாக இருந்தாள். கண்களால் யாரையோ தேடி அலைய அவளையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டான் தேவநாதன். தாஸ் அந்த பெண்ணைப் பார்த்த உடனே தேவனிடம் சைகை செய்தான்

   

”இல்லை தாஸ் இது பவி கிடையாது. இது வேற ஆனா ரொம்ப அழகா இருக்கா” என அவன் அமைதியாக சொல்ல தாஸ் தேவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அவளையும் பார்த்துவிட்டு ஏதோ புரிந்து கொண்டு தனக்குதானே சிரித்துக் கொண்டு, தேவனை உலுக்கினான் வா என சைகை செய்ய அவனும் தன்னை சுதார்த்துக் கொண்டு கார் இருந்த இடத்திற்கு அருகில் வருவதற்குள் அவன் முன் ஒருத்தி வந்து மின்னல் போல் வந்து நின்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.