”மாமா” என்றாள். அவளைக் கண்டதும் திகைத்த தேவனும் உடனே
”பவித்ராதானே நீ”
“அட கண்டுபிடிச்சிட்டீங்களே மாமா”
“மாமாவா”
“ஆமாம் எப்பவுமே நான் உங்களை அப்படித்தானே கூப்பிடுவேன் மறந்துட்டீங்களா மாமா”
“இல்லை அது ரொம்ப வருஷமாச்சா அதான் மறந்துட்டேன்.” என சொல்லி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
மாடர்னாக இருந்தாள், தலைமுடியை தோள்பட்டை வரை கட் செய்து அலைஅலையாக முன்னும் பின்னும் போட்டு அடிக்கடி அதை கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். ஜீன்ஸ் பேண்ட்டும், டீசர்ட்டும் அவளது தோளில் ஒரு பையும், கையில் ஒரு பையுமாக கூலிங்க்ளாசை தன் டீசர்ட்டில் சொருகிக்கொண்டு சிரித்தபடியே நின்றிருந்தாள் பவி.
”சரி வா போலாம்” என சொல்ல அவளோ ஒரு கையால் அவனது கையை கோர்த்தபடி நிற்க அதை தடுத்து ஒதுங்கியவன்
”இப்படியெல்லாம் செய்யாத”
”ஏன் மாமா காலேஜ் படிக்கறப்ப என் கூட ஜாலியா விளையாடுவீங்க இப்ப என்ன”
“அப்ப நீ குட்டிப் பொண்ணு, இப்ப நீ வளர்ந்துட்ட இங்க பாரு பாதி ஊரே இங்கதான் இருக்கு, இப்படி நீ என் கூட நெருக்கமா வந்தா உன்னைப்பத்தி தப்பா நினைக்கமாட்டாங்க”
“நினைச்சா நினைக்கட்டும் மாமா, எனக்கென்ன நான் இப்படித்தான் வருவேன்” என மீண்டும்