(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

பவித்ராவோ அவனை பார்த்து ரசித்து சிரித்தபடியே அந்த பாடலுக்கு தாளம் போட்டு கொண்டிருந்தாள்.

   

விக்ரமின் வீடு ஒர்க்ஷாப் இருக்கும் வரிசையில் 4 வீடு தள்ளியே இருந்தபடியால் அங்கு சென்று நிறுத்தினான். 

   

விகரமின் அப்பா அம்மா ஒரு விபத்தில் இறந்த காரணத்தால், தங்கையை அவனது மாமன் இருந்த கோவை வீட்டில் வைத்து வளர்த்து வந்தான். பள்ளி முடிந்த கையோடு கல்லூரி படிப்பிற்காக அவளை ஹாஸ்டலில் தங்க வைத்தான். அந்த ஹாஸ்டல் அறைக்கு சக தோழியாக வந்தவள் கீர்த்தனா. 

   

பவியை விட 1 வயது சிறியவள், பவித்ரா எம்.பி.ஏ படித்திருந்தாள், கீர்த்தனா இன்ஜினியரிங் படித்திருந்தாள். கீர்த்தனாவை விக்ரமுக்கு நன்றாகவே தெரியும் தங்கையை பார்க்க எண்ணி ஒரு முறை ஹாஸ்டலுக்கு சென்ற போது இவளைப் பார்த்தான். அதன்பிறகு கீர்த்தனாவிற்காகவே மாதம் ஒரு முறை பவியை காணச் சென்றான். இப்போது காரை விட்டு பவியும் கீர்த்தனாவும் இறங்குவதைக் கண்ட விக்ரமுக்கு தலைகால் புரியவில்லை. 

   

பவித்ரா வந்தது கூட அவனுக்குப் பெரிதாக இல்லை, கூட கீர்த்தனா வரவும் அவனது சந்தோஷம் தாங்கவில்லை. கடையின் முன்பக்கம் விக்ரம் இருந்த காரணத்தால் வந்தவர்களை கண்டதும் ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து நின்றான். முதலில் கீர்த்தனாவிடம் பேசினால் தேவனுக்கு சந்தேகம் வரும் என நினைத்து தன் தங்கையிடம்

   

”வா பவி எப்படியிருக்க”

   

“நல்லாயிருக்கேன் அண்ணா” என தன் அண்ணனை அணைத்து விட்டு தன் லக்கேஜ்களை அவனிடம் காட்டி

   

”இதான் என்னோட லக்கேஜ் எடுத்துக்க, என்னால தூக்கிட்டு வரமுடியாது” என சொல்ல அவனும் சரியென்றான். தேவன் விக்ரமிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.