”லாரி என்னாச்சி”
“2 டெலிவரி பண்ணிட்டேன் அண்ணா இனி ஒண்ணுதான்”
“சரி” என சொல்லி தேவா அடுத்து கீர்த்தனாவை ஆசையாகப் பார்க்க விக்ரமும் ஆசையாக கீர்த்தனாவை பார்க்க தாஸ் குழம்பினான்.
விக்ரம் கீர்த்தினாவிடம்
”ஹாய் கீர்த்தி எப்படியிருக்க” என கேட்க
அவளோ அமைதியாகச் சிரித்தபடி
”சௌக்கியமா இருக்கேன்” என்றாள்.
”அண்ணா நான்தான் இவளை கூட்டிட்டு வந்தேன் 1 மாசம்தான் ப்ளீஸ்ணா இங்கயே இருக்கட்டும்” என சொல்ல விக்ரமுக்கு என்ன கசக்கவா போகிறது அவன் உடனே சரியென தலையாட்ட பவி சந்தோஷத்தில் ஐ என கூக்குரலிட்டு கீர்த்தனாவிடம்
”வா கீர்த்தி இனி 1 மாசம் நாம இங்கதான் இருக்கனும் வா வா, உனக்கு நான் இந்த ஊரை சுத்திக் காட்டறேன்“ என சொல்ல அவளும் சந்தோஷமாக தலையாட்ட பவி உடனே வா என சொல்லி வீட்டுக்குள் செல்ல கீர்த்தனா அவனிடம் தன் பையில் இருந்து ஒரு தொகையை விக்ரமிடம் நீட்டினாள் அதை வாங்காமல்
”எதுக்கு இது”
“என்னதான் ப்ரெண்ட் வீடுண்ணாலும் என் செலவுகளுக்கு இந்த பணம் வைச்சிக்குங்க”
“கீர்த்தி எதுக்கு இப்படி செய்ற இதெல்லாம் வேணாம்”