(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

அவனது கையை பிடித்துக் கொள்ள அவனோ

   

”முதல்ல என்னை நீ மாமான்னு கூப்பிடறத நிறுத்து”

   

”நான் அப்படித்தான் கூப்பிடுவேன்” என அவள் சிரித்துக் கொண்டே சொல்ல தாஸ் அவள் முன் நின்று முறைக்க அவளோ அவனிடம் சிறு பிள்ளை போல உதட்டை சுழித்து அவனை தள்ளி விடவே அவனுக்கு கோபமே வந்தது

   

”தாஸ் விடு சின்ன பொண்ணுதான் விடு விடு” என சொல்ல தாஸும் அமைதியானான். மூவருமாக காரிடம் வர அந்த கேரள பெண் அங்கு இருப்பதைக் கண்டு சந்தேகத்துடன் பவியை பார்த்தான்.

   

”மாமா இவள் என் ப்ரெண்ட்தான், பேரு கீர்த்தனா நான்தான் கூட்டிட்டு வந்தேன்.” என சொல்ல தேவநாதன் அவளைப் பார்க்க அவள் கைகூப்பி

   

”நமஸ்காரம்” என்றாள். அவளது பேச்சில் அப்படியே மலையாள வாடை அடிக்கவே அவனும் சிரித்துக் கொண்டே

   

”வணக்கம்” என சொல்லிவிட்டு பவியிடம்

   

”கார்ல ஏறிக்குங்க” என சொல்ல

   

”நான் முன்னாடி உட்கார்ந்துக்கறேன்” என பவி சொல்ல தாஸ் முடியாது என பலமாக தலையாட்ட மீண்டும் அவனை லேசாக அடிக்கவே தேவநாதன் 

   

”சும்மாயிரு பவி, அவன்ட்ட விளையாடாத முன்னாடிதானே ஏறிக்க” என சொல்லி கார் லாக்கை ரிலீஸ் செய்தான், அவள் ஏறியதும் அவளது லக்கேஜ்களை தாஸ் எடுத்துக் கொண்டு பின்னாடி டோர் திறந்து வைத்து அதில் ஏறிக்கொண்டான்.

   

பின்சீட் கதவு திறந்து கீர்த்தனா லக்கேஜ்களுடன் ஏறிக்கொண்டதும், தேவன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.