அவனிடமே தந்தான்
”இந்தாங்க வாங்க போலாம்”
“வெயிட்” என சொல்லிவிட்டு செக்யூரிட்டியிடம்
”கார் இருக்கா” என கேட்க தேவனோ
”என் கார் இருக்கு வாங்க”
“எனக்கு தனியா கார் வேணும்”
“டாக்சி இருக்கு ஓகேவா” என மெதுவாக பேச அவனும் சரியென்றான். உடனே தேவா தாஸை பார்க்க அவன் வெளியே அவசரமாகச் சென்றான்.
”வாங்க போலாம்” என அவனது தோளை பிடிக்க வர செக்யூரிட்டி கத்தினார்கள்
”கை எடுங்க இப்படியெல்லாம் தொடக்கூடாது” என சொல்ல அவன் வேண்டுமென்றே சரணது கையை பிடித்தான், ஆனால் தேவாவின் மனதில் ஏதோ உறுத்த ஒரு நொடிதான் பின்பு விட்டான்.
”பார்க்க சின்ன பையனா இருக்கானே, கூட்டத்தில தொலைஞ்சிடுவான்னுதான் தொட்டேன் ரொம்ப பண்றீங்களே நீங்களே கூட்டிட்டு வாங்க இந்தாப்பா தம்பி தொலைஞ்சிடாம வந்து சேரு” என சொல்லிக் கொண்டே முன்னாடி நடந்தான். அவன் நடக்கும் மிடுக்கும் திமிரும் கண்ட சரணோ இளக்காரமாக புன்னகைத்துக் கொண்டே பின்னாடியே நடந்துச் சென்றான்.
தேவன் டாக்சி என சொல்லும் போதே தாஸ் உடனே வெளியேறி ஒரு டாக்சியை பிடித்து அதை வெளியே நிப்பாட்டி வைத்திருந்தான். அவர்கள் வெளியே வரும் போது டாக்சி அதற்குள் தயாராக இருக்கவே அதில் சரண் மற்றும் அவனது செக்யூரிட்டிகள் ஏறிக்கொண்டதும் செக்யூரிட்டியிடம் ஓட்டலின் பெயரைச் சொல்லி