“இல்லை இல்லை நான் கூட்டிட்டு வரேன் அவரோட போன் நெம்பர் இருக்கா”
“கம்பெனி நெம்பர்தான் இருக்கு”
“சரி நான் வந்துடறேன்” என சொல்லிக் கொண்டே போன் வைத்தவன்
”தாஸ்” என அழைக்க தாஸும் அங்கு வந்தான். அவன் கண்களில் என்ன என்பது போல் தெரிய அவன் தூரத்தில் இருந்த ஒருவனை கைகாட்டினான்
”அவன்தான் வா” என சொல்ல தாஸும் பலகையுடன் தேவாவுடன் நடந்து சென்றான்.
அங்கு பல இருக்கைகள் போடப்பட்டு அதில் ஒரு இடத்தில் காதில் ஹெட்போனுடன் ஜீன்ஸ் சர்ட், அதற்கு மேல் ப்ரவுன் நிற லெதர் ஜாக்கெட் தலையில் தொப்பி வேறு, கையில் போனில் நோண்டிக்கொண்டே சுற்றி முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் 2 சூட்கேஸ்கள் இருந்தது. நேராக அவனிடம் சென்று நின்றார்கள். மீசையும் தாடியுமாக வெண்மை நிறத்தில் இருந்தான், வெளிநாட்டுக்குண்டான நடை உடை, பாவனை, வெளுப்பு அவனிடத்தில் அப்பட்டமாக தெரிந்தது. காதில் அப்போதும் ஹெட்போன் இருந்தது
”சரண் தானே” என கேட்க தலையை கூட நிமிர்த்தாமல் இருக்கவே அவனிடம் நெருங்குவதற்குள் 2 பேர் அங்கு வந்தார்கள் செக்யூரிட்டிகள் போல
”வாட்” என கத்தவும்
”எந்த ஊர் நீங்க தமிழ் தெரியாதா” என கேட்க அவர்களும்
”என்ன வேணும்” என ஒருவர் தமிழில் பேச
“சரண்”