(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

அந்த வீட்டில் பிறந்த மற்றவர்களுக்கு கூட இல்லாத ஒரு மதிப்பு தேவனிடம் உண்டு, அவன் சொன்னதும் அவ்வேலை முடிந்துவிடும், தாத்தா முதல் கடைநிலை வேலையாள் கூட அவனின் பிடிவாதம் மற்றும் கோபத்துக்கு அடங்கி அவனுக்காக அனைத்தும் செய்வார்கள். அதீத செல்லத்தால் பிடிவாதக்காரனாக மாறினான். தேவநாதன் பிறந்த உடன் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால், அடுத்து சூர்யநாதனுக்கு செல்லம் கொடுத்தார்கள் அவனின் பெற்றோர்கள். அவன் பண்பாகவும் அதே சமயம் அமைதியாக இருந்த காரணத்தால் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

   

அடுத்து தேவநாதனின் தாய்மாமன் சேதுப்பிள்ளை கணக்கில் புலி, நல்லவர், அதே சமயம் அந்த வீடு மற்றும் ஆஸ்திக்காகவே தங்கையின் பெயரைச் சொல்லி வீட்டிற்குள் நுழைந்தவர், 20 வருடங்களாக அங்கேயே தங்கி கைலாசநாதன் மற்றும் விசுவாதனை கைக்குள் போட்டுக் கொண்டு வாழ்பவர்.

   

 இதில் அவர் அரசியல் கட்சியில் வேறு இருந்தார். எங்காவது கட்சி மீட்டிங் என்றால் தேவனது லாரிகளை கேட்டு வாங்கிக் கொள்வார். அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் தனக்காக பயன்படுத்திக் கொள்பவர் அவர் மட்டுமே. 

   

ஆனாலும் அவர் மீது தேவனை தவிர அனைவருக்கும் ஒரு மதிப்பு மரியாதையை தங்கள் மனதில் கொடுத்திருந்தார்கள். அவரது உண்மையான எண்ணமே அந்த வீட்டையும் அனைத்து செல்வங்களையும் தன் பெண்களை இந்த வீட்டு வாரிசுகளுக்கு கட்டி வைத்து மொத்தத்தையும் தான் ஆள வேண்டும் என்று பல வருடங்களாக அவர் மனதில் ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர்.

   

அந்த நாளுக்காக பலரிடம் நன்மதிப்பை பெற்று அவரின் பேச்சுக்கு யாரும் மறுப்பு சொல்லாதபடி அந்த வீட்டையே தன் கைக்குள் வைத்திருந்தார். அதன் காரணமாக அவரது 3 பெண்களுக்கு ஆகும் படிப்பு செலவு முதல் அனைத்து செலவுகளையும் வீட்டில் இருந்தவர்களே செய்யலானார்கள். அதில் அந்த இரு பெண்களும் மகாராணிகளை போல அந்த வீட்டில் வலம் வந்தார்கள். சுப்ரஜாவிற்கு தேவநாதனே அனைத்தும் செய்து வைத்தான். அவனது வளர்ப்பில் அவள் வளர்ந்த காரணத்தால் மற்றவர்களை போல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.