(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

வாங்க தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமனால் கூட முடியவில்லை, அதே சமயம் தேவன் ஒன்று சொன்னால் போதும் அவன் கைகாட்டும் இடத்திற்கு அடுத்த நொடியே மறுப்பு சொல்லாமல் லாரி செல்லும். 

   

அவனே கஷ்டப்பட்டு தன் சொந்த முயற்சியில் வேலை செய்து ஒவ்வொரு லாரியாக வாங்கிய காரணத்தால் ஒவ்வொரு லாரி ட்ரைவர்களின் பெயரும், லாரியின் நெம்பர்களும் என 50 லாரிகளைப் பற்றிய விவரங்கள் மனப்பாடமே ஆகிவிட்டது தேவாவிற்கு. 

   

முன்பெல்லாம் லாரிக்கு ஏதாவது கோளாரு என்றால் வெளியில் ரிப்பேர் செய்வது வழக்கம் அதற்கே நிறைய செலவாகும், இம்முறை தேவன் ஒர்க்ஷாப் திறக்கவும் அவனது தந்தை தனக்கென சொந்தமாகவே 3 லாரிகளை வைத்திருந்தார், அதற்கு ஏற்படும் பழுதுகளை சரி பார்க்க அவனிடம் ஒப்படைத்தார்.

   

 அவனும் பில் போட்டு தந்தையிடம் பணம் பெற்று கொண்டே வெளியே விடுவான். அப்படியொரு கணக்கில் சூரன். தொழில் வேறு, குடும்பம் வேறு என்று நினைப்பவன். அந்த காரணத்தால்தான் இந்தளவுக்கு அவன் உயர்ந்து இருந்தான். 

   

சிறு வயது முதல் தாத்தாவின் வளர்ப்போ அல்லது அவனுடைய இயல்போ யாருக்கும் அஞ்சாதவனாக யார் பேச்சும் கேட்காதவனாக சுய முடிவுடன் வளர்ந்தான்.

   

இப்போது 30 வயது படிப்பு முடிந்த இந்த 8 வருடத்தில் பேரும், புகழும், பெரும் வளர்ச்சியும் அடைந்தான். அவனது தந்தை, சித்தப்பா போல் பணம் புரளவில்லையென்றாலும், மக்களின் மனதில் அவர்களுக்கு முன் இவன் இருந்தான். 

   

படித்த படிப்பிற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது கண்டு விக்ரமை போலவே அவர்களுக்கும் தனது ஒர்க்ஷாப்பில் வேலை தந்தான். அவனது தந்தைக்கு இந்த ஒர்க்ஷாப் பிடிக்கவில்லை என்றாலும் அவனுடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என தோன்றவே அதோடு அதை விட்டார். 

   

அவனது வளர்ச்சியின் பாதிப்பு வீட்டிலும் எதிரொளித்தது. அவன் 3 தொழில்கள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.