(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

 எந்தளவிற்கு கோபமோ அந்தளவிற்கு அமைதியான குணம் இருக்கும் அவனிடத்தில். அவனை அமைதிப்படுத்துவதே தாஸின் வேலை, பேசாமல் அவன் சைகை மூலமே தேவனை சமாதானம் செய்வான். அவனுக்குத் தேவை அமைதி மட்டுமே அது தாஸிடம் நிறையவே கிடைத்தது. தன்னுடைய இன்னொரு சகோதரனாகவே தாஸை பார்த்திருந்தான் தேவா. 

   

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கம். தேவன் இருக்குமிடத்தில் தாஸ் இருப்பான், தாஸ் இருக்குமிடத்தில் தேவன் இருக்க வேண்டிய அவசியமில்லை. தேவன் இல்லாமயே பல வேலைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறான் தாஸ். ஊமை என்றாலும் தேவனுடன் சேர்ந்து உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, தொழில் வித்தை என அனைத்தும் கற்று தெளிந்திருந்தான். தேவன் கண் அசைத்தாலே போதும் அதை அப்படியே  செய்து முடிப்பவன் தாஸ், 

   

தேவநாதன் கட்டிட இன்ஜினியர் படிப்பு படித்து முடித்ததும் தன் தந்தையைப் போலவே கன்ஸ்டர்க்ஷனில் குதித்தான். அவனது தந்தை பில்டிங் கட்டுபவர், ஏகப்பட்ட நியாயம் அநியாயங்கள் அவரது தொழிலில் நடப்பதைக் கண்டு அவரிடம் இருந்து பிரிந்து தனக்கென ஒரு ஆபிஸ் வைத்து தேவன் கன்ஸ்டரக்ஷன் என போர்டு வைத்துக் கொண்டு சாதாரணமாக உள்ளுரில் சிறு சிறு வீடுகள் கட்டுவது, சிறுசிறு கடைகளை கட்டுவது போன்ற  கட்டுமான வேலைகளை செய்துக் கொண்டிருந்தான். 

   

கூடவே லாரிகளை வைத்திருந்தான். சிமெண்ட் கல்லு, ஜல்லி, இரும்புக் கம்பி போன்றவற்றை கொண்டு வர 3 லாரிகளை வாங்கியவன் தன் தந்தைக்கும் பயன்படுமென 3 10 ஆனது நாட்கள் செல்ல செல்ல அது 50 லாரிகள் ஆனது சொந்த தேவைக்களுக்குப் போக மற்ற தேவைகளுக்காகவும் மற்ற தொழில் புரிபவர்களுக்கும் லாரிகளை வாடகைக்கு விட்டு என சொந்தமாக லாரி ட்ரான்போர்ட் வைத்திருந்தான், அதற்கும் தேவன் ட்ரான்ஸ்போர்ட் என பெயர் வைத்தான்.

   

அவ்வப்போது லாரிகளில் ஏற்படும் ரிப்பேர் வேலைகளுக்கு வெளியிடங்களில் ரிப்பேர் செய்தால் பணம் அதிகம் ஆகுமென யோசித்த போதுதான் அவனுடன் காலேஜில் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்த விக்ரம் வேலையின்றி வெறுப்புடன் சுற்றித்திரிவதைக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.