(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

”சரி நான் போய் கூட்டிட்டு வரேன் ஆமா மாமா ஆனா சரி சரி நேரம் இப்பவே மணி 10 ஓ இன்னும் ஒரு மணி நேரமா சரிங்க மாமா நான் பார்த்துக்கறேன் பேர் என்ன சொன்னீங்க சரண்தானே சரி ஓகே” என தேவநாதன் போனில் தன் தாய்மாமன் சேதுப்பிள்ளையிடம் பேசிவிட்டு பக்கத்தில் இருந்த தன் நண்பன் தாஸிடம்

   

”பேரு சரண் போர்ட்ல எழுதிட்டு போய் நில்லு” என அதிகாரமாகச் சொல்லிவிட்டு ஒரு இடத்தில் சென்று இருக்கையில் அமர்ந்துக் கொண்டு ஒரு காலை தூக்கி இன்னொரு கால் மேல் போட்டுக் கொண்டு கம்பீரமாக வேட்டி சட்டையில் ராஜ களையுடன் கழுத்தில் தங்கத்திலான சிவலிங்கத்தை ருத்ராட்ச செயினில் இணைத்து மாட்டியிருந்தான். 

   

கையில் ஒரு பிரேஸ்லெட், இன்னொரு கையில் தங்க வாட்ச், கண்களில் ஒரு தீர்க்கம், முகத்தில் ஒரு பிரகாசத்துடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை கடந்து செல்லும் ஆண் பெண்கள் என அனைத்து வயதினரும் ஒரு முறை அவனை திரும்பிப் பார்த்துவிட்டு போகத் தவறவில்லை. 

   

அதிலும் ஏர் ஹோஸ்டஸ்கள் வேண்டுமென்றே இரண்டு முறை அதே பக்கம் அலைந்து திரிந்து அவனை பார்க்க அவனோ யாரையும் பார்க்காமல் அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் போர்டுகள் அவற்றை மட்டுமே பார்க்கலானான்.

   

தாஸும் ஒரு போர்டில் சரண் என தமிழில் பெரிதாக குண்டு குண்டாக எழுதி அதை எடுத்துக் கொண்டு பயணிகள் வரும் பாதைக்கு நேராக இருந்த மக்களின் கூட்டத்துடன் கலந்துக் கொண்டு அக்கம் பக்கம் இருப்பவர்கள் போல போர்டை வைத்துக் கொண்டு காத்திருந்தான் தாஸ்.

   

தாஸ் ஒரு ஊமை என்றாலும் காது நன்றாக கேட்கும், தேவனுக்கு அனைத்தும் தாஸ்தான், அவனது ஊனத்தை வைத்து வேலையில் சேர்க்கவில்லை, அவனது திறமையை வைத்து வேலைக்குச் சேர்த்தான். இதுவரை தேவனின் கோபத்துக்கு ஆளாகி பல பேர் வேலையை விட்டு ஒடியிருக்கிறார்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.