(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சொல்லி பேசு”

   

“இல்லைண்ணா பழகிடுச்சி. வேலை கிடைக்காம இருந்த எனக்கு உன்னோட ஒர்க்ஷாப்ல சீனியர் பதவி கொடுத்திருக்க அதுவே பெரிசு. என்னை உன் நண்பனா இன்னும் நீ நினைக்கறதே போதும்ணா”

   

“உன் கிட்ட என்ன பேசினாலும் நீ இதையேதான் சொல்வ சரி என்ன விசயம் சொல்லு?”

   

“அண்ணா ஊர்ல இருந்து தங்கச்சி வராள். அவளை கூட்டிட்டு வரனும் லீவு வேணும்”

   

“லீவா எதுக்கு எதுல வர்றா”

   

“ட்ரெயின்ல வர்றாள்ணா”

   

“அவ்ளோதானே அட்ரஸ் கொடுத்து ஆட்டோல வர சொல்லு நீ எதுக்கு போகனும், 3 லாரிகள் இன்னிக்கு மதியமே சரிபண்ணி பார்ட்டிகளுக்கு அனுப்பனும் மறந்துட்டியா”

   

“மறக்கலைண்ணா ஆனா தங்கச்சி சின்ன குழந்தை உனக்கும் தெரியுமே நீயும் பார்த்திருக்கியே”

   

“ம் பார்த்திருக்கேன் நாம காலேஜ் படிக்கறப்ப ஸ்கூல் யூனிபார்ம்ல பார்த்திருக்கேன். ஆனா இப்ப வளர்ந்திருப்பாளே இன்னுமா அவள் குழந்தை”

   

“வளர்ந்துட்டா ஆனாலும் குழந்தைதனம் அவளைவிட்டு இன்றும் போகலையே. தப்பா எங்கயாவது காணாம போயிட்டா என்ன செய்றது அதான் பார்க்கறேன்”

   

”இல்லை இல்லை அங்க வேலை கெடும். ஆமா எத்தனை மணிக்கு ட்ரெயின்னு சொல்லு நான் போய் கூட்டிட்டு வரேன்”

   

“அய்யோ அண்ணா நீ எதுக்கு வேணாம்ணா நான் வேற ஆளை அனுப்பறேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.