”எஸ்” என்றான்
”கிளம்பு”
“நீங்க யாரு”
“நாதன் குருப்ஸ்ல இருந்து வந்திருக்கேன் உன்னை கூட்டிவர சொன்னாங்க போலாமா” என கேட்க அவனோ செக்யூரிட்டியை பார்க்க
”செக் பண்ணிட்டிங்களா இவங்கதானான்னு” என கேட்க அவர்களோ தேவனிடம்
”நீங்கதான் நாதன் குரூப்ஸ்ன்னு எப்படி தெரிஞ்சிக்கறது ஆதாரம் இருக்கா” என கேட்க தாஸ் உடனே விசிட்டிங் கார்டு நீட்டினான். அதை வாங்கிய செக்யூரிட்டி
”கரெக்ட் சார் இவங்கதான்” என சொல்ல தேவன் பேசினான்
”இவங்கதான் சரண்னு நான் எப்படி நம்பறது உங்க கிட்ட ஆதாரம் ஏதாவது இருக்கா” என கேட்க
அவர்கள் கோபத்துடன்
”என்ன கிண்டலா நாங்க லண்டன்ல இருந்து வந்திருப்பது உங்களுக்காகத்தானே இப்படியா நீங்க எங்களை அவமானப்படுத்துவீங்க” என ஒருவன் கத்த தேவனோ பொறுமையாக
“அதே போலதான் எனக்கும், என்கிட்டயே ஆதாரம் கேட்கறீங்க என்ன கிண்டலா” என சொல்ல உடனே சரண் எழுந்தான்.
அவனிடம் இருந்து ஒரு கவர் நீட்ட அதை வாங்கிய தேவனும் பிரித்துப்பார்த்தான். அதில் இருந்த தகவல்கள் மாமா சொன்ன தகவலோடு ஒத்துப் போய் சரியாக இருக்கவே அதை