”அங்க ரூம் எடுத்தாச்சி” என சொல்ல அவர்களும் ட்ரைவரிடம் சொல்ல அதற்குள் தேவா தன்னுடய காரில் ஏறிக்கொள்ள முன்னாடி அவனது கார் செல்ல பின்னாடி சரணின் டாக்சி என மெயின் ரோடில் ட்ராவல் செய்துக்கொண்டே ஓட்டலை அடைந்தது. ஓட்டல் ரிசப்ஷனில் சாவி போன்ற ஒரு கார்டை வாங்கி செக்யூரிட்டியிடம் தர அவர்களோ
”ஒரு ரூம்தானா நாங்க எங்க தங்கறது”
“அந்த பையனுக்கு பாடிகார்டுங்கதானே நீங்க”
“ஆமாம்”
“அப்ப அந்த பையனோடவே நீங்களும் தங்குங்க”
“இல்லை அவர் எப்பவும் தனியாதான் தங்குவாரு, இன்னொரு ரூம் போடுங்க” என சொல்ல தேவாவும் இன்னொரு ரூம் போட்டுவிட்டு அதற்கான கார்டையும் அவர்களிடம் நீட்டிவிட்டு ரிசப்ஷன் சோபாவில் அமர்ந்திருந்த சரணையே வெறிக்கப் பார்த்தான்.
”எதுக்கு அப்படி பார்க்கற?”
என ஒரு செக்யூரிட்டி கேட்க
”இந்த பையனுக்கு 2 செக்யூரிட்டியான்னு பார்க்கறேன் அப்படி என்ன ஆபத்து வந்துடப்போகுது நாங்க பத்திரமா பார்த்துக்க மாட்டோமா”
“சார் பேர்ல பல மில்லியன் பணம் இருக்கு, அவர் உயிருக்கு ஆபத்து அதான்”
“சந்தோஷம் போங்க போய் ரெஸ்ட் எடுங்க நீங்க வந்த விவரத்தை ஆபிஸ்ல சொல்லிடறேன்” என சொல்லவும் அங்கு வந்த சரணோ தேவநாதனிடம்
”இருங்க உங்க பேரு” என கேட்டான் சரண். திடுக்கிட்டு திரும்பிய தேவனோ எப்போது