(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 02 - சசிரேகா

  

தேவநாதன் கீர்த்தனாவின் நினைவிலேயே காரை ஓட்டிக் கொண்டு சரண் இருக்கும் ஓட்டலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான். போகும் வழியில் தாஸ் அவனிடம் சைகை செய்தான்

   

”என்னாச்சி உனக்குன்னு கேட்கறியா, தெரியலை தாஸ் என்னமோ பண்ணுது சொல்லத் தெரியாத ஒரு உணர்வு இதுவரைக்கும் எனக்குள்ள எழாத ஒரு உணர்வு இப்ப எனக்கு வந்திருக்கு” என அவன் மென்மையாகச் சொல்ல தாஸ் உடனே அதைப் புரிந்துக் கொண்டு அவனிடம் ஏதோ சைகை செய்ய

   

”யாரை சொல்ற பவியை பத்தியா” என கேட்க அவனோ இல்லை என தலையாட்டி வேறு சைகை செய்ய 

   

”கீர்த்தனாவை பத்தியா சொல்ற”

   

 என சொல்ல அவனும் ஆம் என தலையாட்ட

   

”உனக்கு கீர்த்தனாவை பிடிச்சிருக்கா எனக்கு அவளை பார்த்த உடனே பிடிச்சி போச்சி. அழகு சிலை” என தேவன் சொல்ல தாஸ் அவனது தோளை போட்டு உலுக்கி வண்டியை நிப்பாட்ட சொல்ல தேவனும் குழப்பத்துடன் வண்டியை ரோடு ஓரமாக நிப்பாட்டினான்

   

”என்னடா ஆச்சி உனக்கு எதுக்கு இப்ப வண்டியை நிப்பாட்ட சொன்ன” என கேட்க தாஸ் அவனிடம் வரிசையாக சைகைகள் செய்ய அதைக் கவனமாக பார்த்த தேவனின் முகம் மாறியது

   

”என்ன சொல்ல வர்ற, என்னைப் போலவே அந்த பொண்ணு கீர்த்தனாவை விக்ரமும் பார்க்கறானாமா” என சொல்ல அவனும் ஆம் என சொல்ல இல்லை என மறுத்தான் தேவன்

   

”இல்லைடா பவியோட ப்ரெண்ட் அவள், நண்பனோட தங்கச்சி எப்படி எனக்கும் தங்கச்சியோ அது போல அவன் தங்கச்சியோட ப்ரெண்ட் அவனுக்கும் தங்கச்சியாதான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.