(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”இன்னும் எவ்ளோ நேரம் இப்படி டார்ச்சர் பண்ணுவானோ” என நினைக்கும் போதே அவனுக்கு போன் வரவே எடுத்துப் பேசினான் அவனது சித்தப்பா விசுவநாதன் இருந்தார்

   

”தேவா சிமெண்ட் மூட்டைங்க தேவைப்படுது. அதை கொண்டு வர  லாரியை அனுப்பு”

   

“எந்த ஊருல சித்தப்பா”

   

“கோவையில” என சொல்ல அவனும் போன் கட் செய்துவிட்டு யாருக்கோ போன் செய்து லாரியின் நெம்பரைச் சொன்னான்

   

”7856 நெம்பர் லாரியிருக்கா”

   

“இல்லைன்னா இன்னும் வரலை வந்துக்கிட்டு இருக்கு” என மறுமுனையில் பதில் வரவே

   

”அப்ப சரி 3423 லாரியிருக்கா”

   

“இருக்குண்ணா”

   

“சரி கோவைக்கு போகனும், சிமெண்ட் மூட்டைங்க ஏத்திட்டு வரனும்னு சொல்லு, சிமெண்ட் கம்பெனி பேப்பர்களை சித்தப்பாகிட்ட வாங்கிக்கச் சொல்லு” என சொல்லிவிட்டு போன் வைத்தான்.

   

அடுத்து அரை மணி நேரம் வரை அங்கு பலத்த மௌனம் சரண் அங்கிருந்த ஃபைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான். 

   

தேவாவோ 

   

”டீலிங் மட்டும் கிடைக்காம போகட்டும் அப்ப இருக்கு இவனுக்கு” என மனதில் நினைக்கும் போதே வெளியில் ஏதோ சத்தம் கேட்கவே சட்டென எழுந்தான். சரணும் உடனே எழுந்து வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.