ஆனா நீ ஒரு லிமிட்டோட அவன்கிட்ட நடந்துக்க நான் சொல்றது புரியுதா உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் ஆயிடாத உன் அப்பாவுக்கு ஒரு நல்ல பேர் ஊர்ல இருக்கு, அதை கெடுத்துடாத கொஞ்ச நாள் பொறுத்துக்க அவன் உருப்படியானதும் கல்யாணம் பண்ணிக்க என் மேல நம்பிக்கை வை என் ஒர்கஷாப் தெரியும்ல”
“தெரியும்ணா”
“ஏதாவது பிரச்சனைன்னா வந்து என்னை கூப்பிடு. இது போல தப்பா எதையாவது செஞ்ச” என அவன் கோபமாக பேச அதற்கே அந்த பெண்
”இல்லைண்ணா இனிமே தப்பு பண்ண மாட்டேன்” என சொல்ல தேவா தாஸிடம்
”தாஸ் இவளை கூட்டிட்டு போய் அவள் வீட்ல விட்டுடு, அவள் அப்பாதானே அப்பாகிட்ட மேனேஜரா இருக்காரு, அவரை என் போனுக்கு போன் பண்ண சொல்லு எதுவும் நீ சொல்ல வேணாம் நான் பேசிக்கறேன். நான் சொன்ன வேலையை முடிச்சதும் அதோட மறந்துடு” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு அந்த அறைக்குள் சென்று பையுடன் வெளியே வந்தான்
”ரூம் யார் பேர்ல புக்காயிருக்கு”
“தெரியலைண்ணா”
என சொல்ல தாஸிடம் பணம் கொடுத்து
”ரூமுக்கு கொடுத்துடு கிளம்பு” என சொல்ல அவனும் அந்த பெண்ணுடன் கிளம்பினான்.
அவர்கள் சென்றதும் திரும்ப அங்கு சரண் இருக்கவே
”ஓய் எம்புட்டு நேரம்தான் லேப்டாப் நோண்டுவ நான் கிளம்பறேன் எனக்கு வேலையிருக்கு”