Page 15 of 40
”யோவ்வா நீயா வந்து என் மேல மோதிட்டு என்னையா கத்தற”
“நானா இல்லையே, நான் நேராதான் வந்தேன் நீதான் குறுக்க வந்த இரு இரு போலீஸ்கிட்ட சொல்றேன்”
என சொல்ல
”சரி சொல்லு நான் உன் அண்ணன் சரண்கிட்ட சொல்றேன்” என சொல்ல அவள் உடனே அமைதியாக அவனிடம்
”அண்ணா எங்க”
“ஓட்டல்ல”
“இப்ப நாம ஓட்டலுக்கு போறோமா”
“இல்லை என் வீட்டுக்கு போறோம் உன் லக்கேஜ் எங்க”
”உங்க வீட்டுக்கா எதுக்கு”
”உன் அப்பாவும் என் அப்பாவும் ப்ரெண்ட்ஸ், அதனால நீ என் வீட்ல தங்கற”
“நான் அண்ணாவோட தங்கறேன்”
“உன் அண்ணாதான் உன்னை என் வீட்ல தங்கச் சொல்லி சொன்னாரு”
”ஓ அப்படியா சரி சரி”
”லக்கேஜ் எங்க?”