(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தெரு வரவும் இன்னும் வேகத்தைக் குறைக்க

   

”என்னய்யா பண்ற இது என்ன மாட்டுவண்டியா இவ்ளோ ஸ்லோவா போகுது”

   

”இப்ப ஸ்கூல் விடற நேரம், குழந்தைங்க போய்கிட்டு இருப்பாங்க, அதான் மெதுவா போறேன் வேணா நீயே வெளிய பாரு” என சொல்ல அவளும் பார்த்தாள். ரோடிற்கு இரு பக்கமும் பள்ளியை விட்டு மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் லைன் லைனாக சென்றுக் கொண்டிருந்தார்கள். அவனது செயலால் அவள் சற்று மனதில் சந்தோஷப்பட்டாள். 

   

தேவாவோ சரியாக தன் நண்பன் விக்ரம் வீடு வரும் போது இன்னும் வேகத்தைக் குறைத்தான். ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே வந்தான். அங்கு பவி சேரில் அமர்ந்துக் கொண்டு இருக்க அவளிடம் பேசியபடியே தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. 

   

அப்போது அவள் சிரித்துக் கொண்டு பேசியதால் அவள் முகம் பிரகாசமாக இருந்தது. கூந்தலை துவட்டியவள் எதேச்சையாக தேவாவை பார்த்துவிட்டாள். ஆசையாக அவனை பார்த்து வெட்கமாக சிரித்து தலை குனியவும் அவனுக்கு ஜிவ்வென்றது, அதையும் தாஸ் பார்த்துவிட்டு தேவாவின் கையை பிடித்து உதற அவன் உடனே சுயஉணர்வு பெற்று வண்டியின் வேகத்தை கூட்டினான். அடுத்து தனது ஒர்க்ஷாப் வரவும் உள்ளே பார்த்தான். அங்கு விக்ரம் வேலை செய்வதைக் கண்டு சிரித்தபடியே தன் வீட்டின் முன் காரை நிப்பாட்டினான்.

   

வீடு வரவும் மூவரும் இறங்கினார்கள். மாலை நேரம் ஆகிவிட்டதால் கோயிலுக்குச் செல்ல வேண்டும், வேறு ஓரிடத்தில் ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருப்பதால் அதை வேறு சென்று பார்க்க வேண்டும் இதில் சரணிடம் சென்று சரண்யா வந்ததை வேற சொல்ல வேண்டும் இதற்கு மத்தியில் தேவாவிற்கு கீர்த்தனாவிடம் பேச வேண்டும் போல் தோன்றியது, தன்னைப் பாரத்து சிரித்தாளே வெட்கப்பட்டாளே அது என்ன என்று கேட்க வெண்டும் அனைத்தும் அவனை குழப்ப முதலில் கோவில் அடுத்து கீர்த்தனா என முடிவெடுத்தான். அதற்காகவே சரண்யாவிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.