”தாங்க்ஸ்ணா இதை கேட்கதான் வெயிட் பண்ணேன்” என சொல்லிக் கொண்டே அப்படியே அவனுடன் நடக்கலானான். அவனது வீடு வரும் வரை மூவரும் எதுவும் பேசாமல் நடந்தார்கள். வீடு வரவும் பவி குதூகலாக வந்து தேவனை பிடித்தாள்
”மாமா”
“என்னை மாமான்னு கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது உனக்கு”
“நான் அப்படித்தான் கூப்பிடுவேன் ஆமா என்ன மாமா நடந்து போறீங்க, உங்க கார் என்னாச்சி ரிப்பேரா”
“கோயிலுக்கு போறேன் அதுக்கு எதுக்கு வண்டி நடந்தே போய் பழக்கம்”
“நானும் வருவேன் மாமா”
”உன் அண்ணன் உனக்காக வந்திருக்கான் பாரு, அவன் கூட நேரத்தை செலவு பண்ணு கோயில் எங்க போயிட போகுது நாளைக்கு கூட நீ கோயிலுக்கு போவ”
“மாமா நீங்க தினமும் கோயிலுக்கு போவீங்களா”
“ஆமாம்”
“அப்ப நாளைக்கு சாயங்காலம் நான் வரேன்” என சொல்ல தேவா விக்ரமை அர்த்தமுடன் ஒரு பார்வை பார்க்க விக்ரம் உடனே புரிந்துக் கொண்டு
”உனக்கு கோயிலுக்கு போகனுமா சரி வா நாம போலாம், எதுக்காக அண்ணாவை தொந்தரவு செய்ற வா வா உள்ள வா” என அவளை இழுத்துக் கொண்டு கீர்த்தனாவை காண ஆவலுடன் விக்ரம் வீட்டுக்குள் செல்ல கீர்த்தனா வெளியே இல்லாமல் போனாளே என அந்த வீட்டு வாசலையே பார்த்த தேவனை மீண்டும் உலுக்கினான் தாஸ்.