(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நினைவு வரவே சற்று குழம்பியவன் பின் தெளிந்தான். 

   

அந்த பெண் கீதாவின் மகள் மித்ரா, வெளியூரில் டாக்டருக்கு படித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டான். சிறுவயதில் பார்த்தது. சில வருடங்கள் கழித்து இப்போது பார்க்கிறான். அமைதியாக அங்கு நடந்து ஒரு ஓரமாக நின்று கீர்த்தனாவை பார்க்க கீர்த்தனாவோ அந்த செந்தாமரை பாட்டியிடமும் கீதாவிடமும் மிகவும் இணக்கமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அவர்களும் அவளிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் திலகாவின் மகன் ஸ்ரீதர் அங்கு வந்தான்

   

”அம்மா பாட்டி சித்தி அங்க தாத்தா கூப்பிடறாரு வாங்க” என அழைக்க அவர்களும் கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு செல்ல ஸ்ரீதரோ அவளிடம் நின்று சிரிக்க அவளோ முகத்தைத் திருப்பவும் தேவாவிற்கு சிரிப்பே வந்தது. அதற்குள் தாஸ் 2 நெய்விளக்குகளுடன் வந்து சேர்ந்தான். அவனுக்கு ஒரு விளக்கு இவனுக்கு ஒரு விளக்கு என இருவரும் எடுத்துக் கொண்டு விளக்கு வைக்கும் இடத்திற்குச் செல்ல அங்கு தாஸ் கீர்த்தனாவைக் கண்டதும் தேவாவின் கையை பிடித்து தடுத்து நிப்பாட்டினான்

   

”என்னடா வா போலாம்”

   

“ம்ஹூம்” என அவன் பலமாக தலையாட்ட

   

”என்னாச்சி இப்ப” என கேட்க அவன் கீர்த்தனாவை காட்ட

   

”நம்ம கீர்த்தனாதானே அப்புறம் என்ன வா வா”

   

“ம்ஹூம்” என அவன் மறுக்க

   

”வாடா போலாம் பாரு, அவளும் விளக்கு வைக்கறா வா வா நாமளும் வைக்கலாம்”

   

என சொல்லி எப்படியோ தாஸை இழுத்துக் கொண்டு விளக்கு வைக்கும் இடத்திற்குச் சென்று நின்றான். அவனைக் கண்டதும் ஸ்ரீதர் மாயமானான். ஸ்ரீதர் சென்றதும் அவளது கவனம் தேவாவிடம் திரும்பியது. அவள் மெல்ல நகர்ந்து ஓரமாக நிற்க அவனோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.