(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அமைதியாக விளக்குகளை பற்றி வைத்து அவள் வைத்த விளக்கிற்கு பக்கத்தில் தன்னுடைய விளக்கை வைத்துவிட்டு அவளிடம் சென்றான்

   

”கீர்த்தனா” என அவன் அழைக்க அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்து சிறுநகை காட்டினாள்.

   

அதற்கு மேல் அவனால் பேச முடியாமல் போனது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தாஸ் இருவரையும் பார்த்து நொந்து போனவன் சட்டென கீர்த்தனாவிடம் ஏதோ சைகை செய்தான். அவளோ புரியாமல்

   

”என்ன சொல்றீங்கண்ணா” என அவள் தாஸை அண்ணா என அழைக்கவே அதோடு அவன் உருகியேவிட்டான். 

   

தேவாவோ

   

”என்னாச்சி தாஸ் என்ன சொல்ற” என கேட்க அவன் மீண்டும் சைகை செய்ய அதைப் பார்த்து கீர்த்தனாவிடம்

   

”அபிஷேகம் நடக்குதாம் பார்க்கப் போகலையான்னு கேட்கறான்” என சொல்ல அவளோ

   

”விளக்கு வைச்சிட்டு போலாம்னு வந்தேன் இதோ போறேன் நீங்க வரலையா” என முதலில் தைரியமாக சத்தமாகப் பேசியவள் இறுதியில் பேசும் போது ஹஸ்கி வாய்சில் பேசவே அவன் அவளை போகுமாறு சைகை செய்ய அவள் சிரித்துக் கொண்டே முன்னடி செல்ல பின்னாடியே சென்றான் தேவா, தாஸ் வேறு வழியின்றி அவன் பின்னாடியே சென்றான்.

   

பெரிய இடமாக கோயில் வளாகம் இருப்பதால் சில பேர் அமர்ந்துக் கொண்டு அபிஷேகத்தை பார்த்தார்கள். சிலர் நின்றுக் கொண்டுப் பார்த்தார்கள். அங்கு ஓரிடத்தில் இடம் காலியாக இருக்கவே அங்கு சென்று அமர்ந்துவிட்டாள் கீர்த்தனா அவளின் அருகில் சென்று தேவா அமர அவனுக்கு அருகில் தாஸ் அமர்ந்துக் கொண்டு பக்தியாக மூவரும் அபிஷேக ஆராதனைகளை காணலானார்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.