(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“பழகலை அதோட எங்க வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் ஏதோ பகை இருக்கு”

   

“பகையா என்ன அது”

   

“தெரியலை என் தாத்தாவுக்கும் தாமரையோட புருஷனுக்கும் சண்டையாம். எப்பவும் ரெண்டு குடும்பமும் முட்டிக்கிட்டுதான் இருக்கும்” என சொல்லும் போதே செந்தாமரையும், கீதாவும் ஆளுக்கு 2 இலைகளில் பிரசாதத்துடன் வந்தார்கள். தேவாவுக்கும் தாஸுக்கும் தர அதை வாங்கிய இருவரும் நன்றி சொல்ல

   

”சரிப்பா நீ சாப்பிடு, நாங்க கிளம்பறோம் அவர் பார்த்தா திட்டுவாரு”

   

”நாங்க ரெண்டு பேருதானே இருக்கோம், எதுக்கு 3 இலை கொண்டு வந்த 

   

“உன் தாத்தாக்கு ஒண்ணு கொடுத்துடு” என சொல்ல அவனும் சரியென சொல்ல அதோடு அவர்கள் சென்றதும் தேவா தாஸை பார்க்க அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கீர்த்தனாவைப் பார்த்தான் அவள் சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதைக் கண்டு சிரித்தவன்

   

”சாப்பிடலையா”

   

“பவியோட சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்”

   

“கோயில்ல விசேஷம்னாதான் வருவியா இல்லை எப்பவுமே வருவியா”

   

“எனக்கு தினமும் காலையில சாயங்காலம் கொயிலுக்கு வந்து விளக்கு வைக்கறது பழக்கம், மாசத்தில எல்லா நாளும் வருவேன் சில நாளை தவிர எமர்ஜன்சி வரமுடியாதப்ப என்ன செய்றது” என சொல்லி அவள் வெட்கப்பட்டு சிரிக்கவும் தேவாவும் அதைப் புரிந்துக் கொண்டு

   

”நானும் அப்படித்தான் தினமும் காலையில கோயிலுக்கு வந்தப்பின்னாடி தான் டிபன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.