நடங்க யாருக்கும் பரிசு தரமாட்டேன்னு சொன்னான்” அதைக் கேட்ட கீர்த்தனாவோ சிரிக்காமல் தேவாவைப் பார்த்தாள்
”என்னவோ தெரியலை எவ்ளோ வேகமா நடந்தாலும் வீடு சீக்கிரமா வந்துடுச்சி” என்றாள் அதைக் கேட்ட தாஸ் அதிர்ந்து கீர்த்தனாவின் கையை பிடித்து உலுக்கி விட்டு ஏதோ சைகை செய்ய தேவாவோ
”உனக்கு உடம்பு சரியில்லைன்னு பயப்படறான் தாஸ்”
“என் உடம்பு நல்லாதான் இருக்கு”
“இல்லை நீ சொன்னதைக் கேட்டு அவனுக்கு அப்படி தோணியிருக்கு, அவனை விடு நீ சொல்லு உனக்கு வீட்டுக்கு போக விருப்பமில்லைன்னா நீ போக வேணாம் கொஞ்ச நேரம் கழிச்சி போகலாம்” என சொல்ல கீர்த்தனா சந்தோஷமாக தலையாட்ட அதை ரசித்த தேவாவிடம் தாஸ் சைகை செய்தான்
”ரோட்ல நின்னுக்கிட்டு பேசினா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க” என அவன் சொல்ல வந்தது. அதைப் புரிந்துக் கொண்ட தேவாவும் கீர்த்தனாவிடம்
”இப்படி ரோட்ல நின்னு பேசினா யாராவது தப்பா நினைப்பாங்க”
”எனக்கு இந்த ஊரை பத்தி எதுவும் தெரியாது”
“இப்ப மணியும் 8க்கு மேல ஆகுது. பவி உன்னைத் தேடுவாளே”
“ஆமாம் சரி நான் கிளம்பறேன்” என சொல்ல
”சரி கூட வரலாமா”
”தாராளமா”