சாப்பிட்டு வேலைக்கு போவேன் அதே போல சாயங்காலம் சாமி பார்த்த பின்னாடிதான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வருவேன். அதுக்கப்புறம் வீட்லதான் இருப்பேன்”
“என்ன வேலை செய்றீங்க?”
“ஏன் உனக்குத் தெரியாதா இந்நேரம் விசாரிச்சிருப்பேன்னு நினைச்சேன்”
“பவி முன்னாடியே சொன்னா, இருந்தாலும் நீங்க சொன்னா கேட்கலாம்னுதான் சீக்கிரமா வீட்டுக்கு போகனுமான்னு பார்க்கறேன்” என அவள் இழுத்து இழுத்துச் சொல்ல அதன் அர்த்தம் புரிந்துக் கொண்ட தேவாவோ அவனது தொழில் மற்றும் வேலைகளைப் பற்றி விளக்கமாக பொறுமையாக சொல்லி முடிக்கவும் அந்த கோயிலே காலியாக ஆரம்பித்தது. தாஸ் அதை கவனித்து தேவாவிடம் போலாம் கோயில் சாத்தப்போறாங்க என சைகை செய்ய தேவா உடனே கோயிலை சுற்றி பார்த்துவிட்டு கீர்த்தனாவிடம்
”கீர்த்தனா வா கோயில் நடை சாத்தப்போறாங்க மணி 8 ஆகுது போலாம் வா” என அவளை எழுப்பி கோயிலுக்கு வெளியே வந்து அவளுடன் பொறுமையாக நடக்கலானான். அவளோ மெதுவாக நடக்க அவனும் மெதுவாக நடந்தான். தாஸ் அவர்களின் நடையைக் கண்டு நடக்க முடியாமல் திணறினான்.
கீர்த்தனாவோ வீடு இருக்கும் தெரு வரவும் அடிபிரதட்சணம் போல நடக்க இப்போது தேவாவால் மெதுவாக நடக்க முடியாமல் தடுமாறி அவளைப் பார்த்தான். அவளது முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டு இந்த கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளலாம் என நினைத்து அவளைப் போலவே நடக்கலானான். தாஸ் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இருவரின் முன்பு நின்று சைகை செய்ய அதைக் கண்ட கீர்த்தனாவிற்கு எதுவும் புரியாமல் விழிக்க தேவா மட்டும் சிரித்தான்
”தாஸ் அண்ணா என்ன சொல்றாரு” என கீர்த்தனா தேவநாதனிடம் கேட்க
”நாம ரெண்டு பேரும் இப்படி மெதுவா நடக்கறோம்ல அதைப்பார்த்து இங்க என்ன ரேஸ் நடக்குதா, மெதுவா நடந்தா பரிசு கிடைக்கும்னு யாராவது சொன்னாங்களா வேகமாக