என சொல்லி இருவரும் இப்போது சற்று வேகமாக நடக்கவே தாஸ் நிம்மதியானான்.
”அப்புறம் சாமி கிட்ட என்ன வேண்டிக்கிட்ட”
“படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி வேலை வேணும்னு வேண்டிக்கிட்டேன்”
“ஓ என்ன படிச்சிருக்க”
“இன்ஜினியர்”
”கன்ஸ்ட்ரக்ஷனா இல்லை மெக்கானிக்கா கம்ப்யூட்டரா”
“கன்ஸ்ட்ரக்ஷன்”
“சூப்பர் அப்படின்னா ஈசியா உனக்கு வேலை கிடைக்கும்”
“அப்படியா ஆனா எனக்கு யார் வேலை தருவாங்க”
“யாருக்கு இப்ப அவசரமா ஆள் தேவையோ, அவங்க தருவாங்க”
“இங்க யாருக்கு அவசரம் இருக்கு”
“யார் வேணும்னாலும் இப்ப என்னை எடுத்துக்க எனக்கு ஏற்கனவே 3 தொழில்கள் இருக்கு, ஒரு பக்கம் வீடு கட்டனும், இன்னொரு பக்கம் லாரி ட்ரான்ஸ்போர்ட்டும் பார்த்துக்கனும், இன்னொரு பக்கம் ஒர்க்ஷாப்பும் கவனிக்கனும், நிறைய வேலைங்க ஒரே அலைச்சல், ஒரு பிசினஸ்க்காவது துணைக்கு ஆள் இருந்தா நல்லாயிருக்கும்”
“பவியோட அண்ணன் இருக்காரே ஒர்க்ஷாப் பார்த்துக்க”
“ஆமாம் அப்ப மீதிக்கு”