சிரித்துவிட்டு
”எதுக்கு தேடினீங்க”
“இது உனக்குப் புது ஊரு, நீ தொலைஞ்சிடக்கூடாதுல்ல உன்னை பத்திரமா கொண்டு போய் வீட்ல சேர்த்துடலாம்னு”
“அதுக்காகதான் தாஸ் அண்ணாவை விட்டு என்னை கூட்டிட்டு வரச் சொன்னீங்களா”
“அவனாதான் உன்னை தேடிப் போனான்”
“அப்ப நீங்க என்னைத் தேடலையா”
“நீயில்லாம இந்த கோயிலை விட்டு என்னால போக முடியுமா என்ன எப்படியும் இந்த பக்கமா நீ வருவேன்னு உனக்காக இங்க காத்திருந்தேன்” என அவன் பேச பேச தாஸ்க்கு வியப்பாக இருந்தது. அவன் தேவாவையே உற்றுப் பார்க்க கீர்த்தனா அதைக் கவனித்து
”தாஸ் அண்ணா எதுக்காக உங்களை அப்படி உத்துப்பார்க்கறாரு” என கேட்க தேவா அப்போதுதான் தாஸை பார்த்தான்
”எதுக்குடா என்னையே இப்படி பார்த்து வைக்கற” என கேட்க அவனோ ஏதோ சைகை செய்ய அதைக் கண்டு சிரித்தவன் கீர்த்தனாவிடம்
”நான் இதுவரைக்கும் அதிகமா எந்தப் பொண்ணுகிட்டயும் பேசினதில்லை, முதல் முறையா உன்கிட்ட நிறைய பேசறேன்ல அதான் அவன் அப்படி அதிசயமாகப் பார்க்கறானாம்”
”ஓ அப்படியா” என கீர்த்தனா சொல்லி வெட்கப்பட்டபோது அவ்விடம் செந்தாமரை வந்தாள். கையில் இலையில் பிரசாதங்களை எடுத்துக் கொண்டு வந்து அதை கீர்த்தனாவிடம் தந்தாள்
”எங்கல்லாம் உன்னை தேடறது. இந்தா சாப்பிடு” என சொல்லி அங்கிருந்த தேவாவைக்