இதில் சில பெண்கள் பிள்ளையாரின் பக்தி பாடல்களை பாட அவள் பக்கத்தில் இருந்த பெண்மணியுடன் கீர்த்தனாவும் பாட அவளது இனிமையான குரலில் தேவாவும் தாஸும் சரண்டர் ஆனார்கள். கூட சேர்ந்து தேவா மெதுவாக பாட தாஸ்க்கு தேவாவின் செயல்கள் வியப்பாக இருந்தது. இருந்தாலும் கீர்த்தனா அவனை அண்ணா என்றதும் புதிதாக சகோதரப் பாசம் பொங்கியது தாஸ்க்கு.
அவளது இனிமையான குரலால் கவரப்பட்ட அங்கு பாடிக்கொண்டிருந்த பெண்களும் அவளை தங்கள் மத்தியில் அமர வைத்துக் கொண்டு அவளுடன் சேர்ந்து பாடலானார்கள். அவளும் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டே கைகளை கூப்பி பாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் மட்டும் பாட பாட அன்று கோயிலுக்கு வந்த அனைவரும் அவளது பாடலையும் சிலர் அவளையும் ரசித்தார்கள்.
அவ்வளவு நேரம் தன் அருகில் இருந்த கீர்த்தனாவிடம் பேச முடியாமல் போனவன் இப்போது தொலைவில் சென்றதும் எப்படியாவது அவளிடம் பேசிட வேண்டும் என ஆவல் கொண்டான். அதற்காகவே காத்திருந்தான். விரைவாகவே அபிஷேகம் ஆராதனை முடிந்த உடன் டாக்டர் குடும்பம் மக்களுக்கு பிரசாதம் கொடுக்க சென்றுவிட மக்களும் சாமியை தரிசித்துவிட்டு கலைந்துச் செல்ல ஆரம்பித்தார்கள். சிலர் பிரசாதம் வாங்க லைனில் நிற்க, சிலர் கோயிலை வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தேவாவும் தாஸும் கோயிலை வலம் வந்துவிட்டு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொண்டார்கள்.
தாஸ் தன் கையில் இருந்த கடிகாரத்தை தேவாவிடம் காட்டி வா போலாம் என சைகை செய்ய
“இருடா உன் தங்கச்சி வரட்டும் புது ஊரு பத்திரமா கூட்டிட்டு போய் அவள் வீட்ல விட்டுடலாம்” என சொல்ல தாஸ்க்கு பதட்டம் வந்து உடனே எழுந்து எங்கோ சென்றான். அவனது போக்கு புரியாமல் விழித்த தேவாவோ கீர்த்தனா எங்கே என கண்களால் அங்கிருக்கும் மக்களுக்கு நடுவில் தேடலானான். 2 நிமிடம் கழித்து தாஸ் கீர்த்தனாவுடன் தேவாவிடம் வந்தான். அவளை அழைத்து வந்து உட்கார வைத்துக் கொண்டான்.
“எங்க போன கீர்த்தனா, உன்னைத்தான் நான் தேடிட்டு இருந்தேன்” என சொல்ல அவளோ