“அப்படி சொல்லாத நீ வா நாங்க இருக்கோம்ல வாம்மா வா” என அவளை பாசமாக உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் பாட்டி.
அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவும் எப்படி தேவா அழைத்து வந்த பெண் என்று, சரண்யாவும் அதற்கு ஆம் என சொல்லவே வீட்டில் இருந்தவர்களும் தங்களுக்குள் கட்டுக்கதையே உருவாக்கி முடித்தார்கள். அவளுக்காக ஒரு அறையும் ஒதுக்கி அதில் அவளைத் தங்க வைத்தார் பாட்டி.
”நீ இங்கயிரும்மா சாப்பிட்டியா”
“இல்லை பாட்டி”
“சரி நான் போய் உனக்கு சாப்பாடு கொண்டு வரேன் சாப்பிடுவ”
”சரிங்க பாட்டி” என சொல்லவும் அவர் வெளியே சென்றுவிட அந்த அறையையே பார்த்தாள். ஓட்டல் அறைகளை விட இந்த அறை நன்றாகவே இருந்தது. ரெப்ரிஷ் செய்ய ரெஸ்ட் ரூம் சென்றாள் சரண்யா.
தேவநாதனோ தாஸுடன் பொறுமையாக தெருவில் நடந்தான். ஒர்க்ஷாப் வரும் போது விக்ரம் எதிர்பட்டான்
”கோயிலுக்காண்ணா”
ஆமாம்
”சரி 3 லாரியும் டெலிவரி பண்ணிட்டேன். பில் கொடுத்து காசும் வாங்கிட்டேன்”
“சரி சரி உன் வேலை முடிஞ்சிடுச்சி. உன் தங்கச்சி வேற வந்திருக்கா, நீ வீட்டுக்கு போ மத்ததை நாளைக்கு வந்து பார்த்துக்குவ” என சொல்ல