(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

62. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

இந்து உண்மையாகவே திகைத்து தான் போனாள்! ஆனாலும் எப்போதும் போல உடனே சமாளித்துக் கொண்டு,

   

"போய் தான் ஆகனும்! இப்போ எதுக்கும்மா இந்த பேச்சு," என்றாள் .

   

"சரி, நீ இப்படியே இருக்க முடியுமாடா? என்னை பத்தி யோசிச்சு பாரு, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா! சரி, சஞ்சீவை உனக்கு பிடிக்கலைனா விடு, உனக்கு எந்த மாதிரி பையன் பிடிக்கும்னு சொல்லு," என்றாள் அர்ச்சனா பரிவுடன்.

   

"ப்ச்... நான் எப்படி அம்மா உங்களை விட்டுட்டு, கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருக்க முடியும்?"

   

"தப்பு இந்து, உன் சந்தோஷம் தான எனக்கு முக்கியம். நீ சந்தோஷமா கல்யாணம் செய்துக்கிட்டா எனக்கு இந்த தனிமை எல்லாம் பிரச்சனையே இல்லை. நான் லக்ஷ்மி, கல்பனா இப்படி அவங்க கூட பேசியே நேரத்தை ஓட்டிடுவேன். எந்த அம்மாவும் அவங்க பொண்ணு சந்தோஷமா இருக்கனும்னு தான் நினைப்பாங்க ...."

   

"அப்படி பொதுப்படையா எல்லா அம்மாவையும் சொல்ல முடியாது அம்மா" மனதில் காஞ்சனாவை நினைத்துக் கொண்டு சொன்ன இந்து, அந்த பேச்சை தொடர விருப்பமில்லாமல், 

   

"சரி அம்மா, நீங்க தூங்குங்க. நாம நாளைக்கு பேசுவோம். குட் நைட்..." என்று சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டாள். அர்ச்சனா வசதியாக படுக்கும் வரை அங்கேயே நின்று பார்த்து விட்டு, அம்மாவிற்கு போர்வையை சரி செய்து விட்டு, தன் அறைக்கு சென்றாள் இந்து.

   

கடந்த சில நாட்கள் போலவே இந்துவிற்கு அன்றும் தூக்கம் வர மறுத்தது. மொபைலை கையில் எடுத்து சஞ்சீவ் முன்பு அவளுக்கு அனுப்பி இருந்த எஸ்.எம்.எஸ்களை படித்தாள். அவன் அவளுக்கு பெயர் வைப்பதாக சொல்லி அனுப்பியிருந்த மெசேஜை படித்தப் போது, அவள் மனதில் இன்பமும் துன்பமும் கலந்து ஒரு வித உணர்வு தோன்றியது. மொபைலை டேபிள் மேலே வைத்து விட்டு கண்களை மூடியவள், தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.