(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

அவளால் சஞ்சீவிற்கு எத்தனை வருத்தம்! அவன் மனதில் ஏற்பட்டிருக்கும் வருத்தத்தை தீர்க்க ஏதாவது வழி கிடைக்காதா என்று வருந்தினாள்! ஒரு நிமிடம் காஞ்சனாவிற்காக, கீதாவிற்காக சிந்தித்தாள், மறு நிமிடம், வீணா சொன்னதுப் போல சஞ்சீவையும், அவளுடைய காதலையும் எண்ணி மருகினாள்! இந்த சித்ரவதையில் இருந்து மீளவாவது, இரவு முடிந்து விடியல் வராதா என்று இறுதியில் எண்ண துவங்கினாள்! அவள் விரும்பியதுப் போல் சற்றே வெளிச்சம் வர துவங்கியதுமே படுக்கையில் இருந்து எழுந்து விட்டு, முகம் கழுவி, பல் துலக்கி, தோட்டத்தில் உலாவினாள்.

   

எவ்வளவு நேரம் என்று தெரியாமலே உணர்ச்சி இல்லாமல் நடந்தவள், கால்கள் வலிக்க துவங்கவும், வீட்டுக்குள் செல்ல திரும்பினாள். இரவு தூங்காததால் தலை விண் என்று வலித்தது!

   

இந்து நெற்றி தேய்த்து விட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தப் போது, அர்ச்சனாவும், கனகாவும் மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவளை பார்த்த உடன் அவர்கள் பேச்சு சட்டென்று நின்றது! இந்து அப்போதிருந்த மனநிலையில் எதை பற்றியும் விளக்கம் கேட்க தோன்றவில்லை. மகளின் வாடியிருந்த முகத்தையும், சிவந்திருந்த விழிகளையும் பார்த்து விட்டு,

   

"என்ன இந்து, உடம்பு சரி இல்லையா என்ன??" என்றாள் அர்ச்சனா.

   

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா! வாக்கிங் போயிட்டு வந்தேன் அது தான்... நீங்க ரெண்டு பேரும் டிஃபன் சாப்பிட்டாச்சா???"

   

"இல்லை டா..." என்று அர்ச்சனா சொல்ல,

   

"எங்கே இந்தும்மா, நீங்க வந்த அப்புறம் தான் சாப்பிடுவேன்னு அம்மா அடம்

{/f90filter}பிடிக்குறாங்க! சரி, உங்களை கூப்பிடலாம்னாலும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க," என்றாள் கனகா!

   

இந்துவிற்குள் மெல்லிய குற்ற உணர்ச்சி மேலோங்கியது! அவளின் வருத்தத்தில் அம்மாவை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.