தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 83 - பிந்து வினோத்
83. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கொஞ்சமாக அசடு வழிந்த விக்னேஷ், “டேய் நண்பா, ஏதோ ஆர்வக் கோளாறுல ஒரு கேள்வி கேட்டுட்டேன், அதுக்காக இப்படி உன் வைஃப் முன்னாடி பழைய கதை எல்லாம் பேசனுமா?” என்றான்!
விவேக் பதில் சொல்ல அவசியமில்லாமல், “அவர் சொல்ல வேண்டாம், எனக்கு ஏற்கனவே லாவண்யா உங்க முழு கதையை சொல்லிட்டாங்க,” என்றாள் பாரதி!
“நீயுமா லாவி?” என் விக்னேஷ் மனைவியை கேட்க,
“யெஸ், யெஸ் விக்கி! முதல் சந்திப்பிலேயே உங்க கதை எல்லாம் நான் பாரதி கிட்ட சொல்லி ஆச்சு,” என்றாள் லாவண்யா!
“அடடா... முதல் நாளே டோட்டல் டாமேஜா?”
விக்னேஷ் முகம் போன போக்கை பார்த்து மீண்டும் அனைவரும் சிரித்தார்கள்! அந்த சிரிப்பின் நடுவே, “அப்படி டாமேஜ் எல்லாம் ஏதுமில்லை... நீங்களும் விவேக்கும் எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ன்னு புரிஞ்சது,” என்றாள் பாரதி.
“அது இப்படி தானா தெரியனும்?”
“இதெல்லாம் இப்போ யோசிச்சு என்ன செய்றது விக்கி? அப்போவே யோசிச்சிருக்கனும்! சரி, நீங்களும் விவேக்கும் பேசுங்க, நான் பாரதிக்கு வீட்டை சுத்தி காட்டிட்டு வரேன்... பசங்க வேற அத்தை மாமாவை தொல்லை செய்றாங்களான்னு பார்க்கனும்...” என சொல்லி பாரதியை தன்னுடன் அழைத்து சென்றாள் லாவண்யா.
பெரியவர்களுடன் இருந்த இரண்டு பிளளைகளையும் ஒருமுறை எட்டிப் பார்த்து விட்டு, அவர்களால் எந்த தொல்லையும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு, பாரதிக்கு வீட்டை சுற்றி காட்டினாள் லாவண்யா.
“பாரதி, விக்கி சொன்னதை பெரிசா எடுத்துக்காதீங்க... சும்மா விவேக்கை கிண்டல் செய்ய