(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

சொன்னார்.”

   

“அட, இதையெல்லாம் கூடவா தப்பா எடுத்துப்பாங்க? நான் ஒன்னும் அவ்வளவு சீரியஸ் டைப் இல்லைங்க லாவண்யா.”

   

“அப்பாடியோ... அப்போ ஓகே! இப்போ தான் உங்க இரண்டு பேர் நடுவே எல்லாம் சரி ஆகி இருக்கு, திரும்ப இவருடைய ஓட்டை வாயால எந்த பிரச்சனையும் வர கூடாதேன்னு நினைச்சேன்.”

   

“ம்ம்ம்... சரியே இல்லையே?”

   

“என்ன சரி இல்லை? விக்கி விவேக்கை டீஸ் செஞ்சுட்டு இருந்தப்போ நீங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதை கவனிச்சேன் அதனால் தான் சொல்றேன். இதுக்காக இரண்டு பேரும் சண்டை எல்லாம் போட்டுக்காதீங்க.”

   

“சண்டையா ஹுஹும்... எனக்கே தெரியும் லாவண்யா! பாவம் விவேக், நடந்ததைப் பத்தி நான் இனி மேல் பேச போறதே கிடையாது. வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் புதுசு தான்! பழைய குப்பைகளை கிளறிட்டு இருக்குறதால எந்த யூஸும் இல்லை.”

   

“சூப்பர்ங்க பாரதி! நல்ல பிளாஸஃபி!”

   

“இதெல்லாம் நானே விவேக் கிட்ட இருந்து கத்துக் கிட்டது தான்! நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க, இந்த ங்க எல்லாம் வேண்டாமே!”

   

“சரி பாரதி. இனிமேல் உன்னை அப்படி தான் கூப்பிட போறேன்! விவேக் பத்தி இவ்வளவு தெளிவா மைன்ட் வச்சிருக்கன்னா, அப்போ நீ கொஞ்சம் முன்னாடி சொன்ன அந்த சரி இல்லைக்கு என்ன அர்த்தம்?”

   

“அதுவா, ஃப்ரென்டுக்காக உங்க ஹஸ்பன்டை குறைச்சு சொல்றீங்களே, அதை தான் சொன்னேன்!”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.