(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

“ஓ, இதை அப்படியும் யோசிக்கலாமா! பரவாயில்லையே!!! விவேக் ரொம்ப லக்கி பாரதி.”

   

“உங்க விக்கியும் கூட ரொம்ப லக்கி தான்,” என்று சொல்லி நட்புடன் புன்னகை புரிந்தாள் பாரதி.

   

❀✿❀✿❀✿

   

ஸ்ருதியின் திருமண நிச்சயதார்த்ததிற்கு கற்பகத்துடன் சென்ற பாரதி, அங்கே வந்திருந்த மற்ற விருந்தினருடன் தன்னை பொறுத்திக் கொள்ள திணறி திண்டாட வேண்டி இருந்தது. கற்பகம் தன்னை சந்தித்துப் பேசிய அனைவரிடமும் பாரதியை அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரத்தில் கற்பகத்தின் தோழி டெய்சி வரவே, பாரதிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

   

பாரதியுடன் வந்திருந்த கற்பகத்தை முன்பே கவனித்த சசிரேகா, கற்பகத்தை சந்திக்க வந்த போது மறக்காமல் ரஞ்சனியையும் உடன் அழைத்து வந்தாள். அதை எதிர்பார்த்து தானே கற்பகம் பாரதியை அழைத்து வந்ததும்!

   

“என்ன கற்பகம் உன் சின்ன மருமகளோடு வந்திருக்க போல இருக்கு,” என்றாள் ரஞ்சனி எதிரே இருந்தவளை எடைப் போட்டுக் கொண்டே!

   

“ஆமாம், ரஞ்சனி! உனக்கு பாரதியை தெரியாதே, இவ தான் என் சின்ன மருமகள். பாரதி, ரஞ்சனி என் ஃப்ரென்ட்!” கற்பகம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

   

இருவரும் பேருக்கு புன்னகைத்துக் கொண்டனர்.

   

“பரவாயில்லை கற்பகம், உனக்கு இருந்தாலும் பெரிய மனசு தான்! ரஞ்சனி சொன்னதைக் கேட்டப் பிறகு இனிமேல் எந்த ஃபங்ஷனா இருந்தாலும் உமாவை மட்டும் தான் பார்க்க முடியும்னு நினைச்சேன். ஆனால் உன் சின்ன மருமகளை அழைச்சிட்டு வந்து இருக்கீயே! உனக்கு எப்போவும் ரொம்ப பெரிய மனசு தான்!” சசிரேகா நல்லவளாக காட்டிக் கொண்டு மறைமுகமாக பாரதியை மட்டம் தட்டினாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.