காஞ்சனாவை கண்டு சிடு சிடுத்தான்.
"என்னம்மா அப்படி அவசர வேலை? கொஞ்சம் நேரம் நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா??"
"கொஞ்ச நேரமா??? மணி ஒன்பது ஆக போகுது! உன்கிட்ட முன்னாடியே சொன்னேன் தானே பொண்ணு பார்க்க போகணும்னு? இப்படி நீ தூங்கிட்டே இருந்தா நான் வேற என்ன செய்றது?"
"ஓ!!!"
"என்னடா??? அதுக்குள்ளே மறந்துப் போயிடுச்சா? இல்லை உன் மனசு மாறிடுச்சா?"
"மனசெல்லாம் ஒன்னும் மாறலை. எந்த பொண்ணா இருந்தாலும் சரி தான்! நான் வரணும்னே இல்லைன்னு சொன்னேன் தானே?"
"திரும்ப இதையே ஆரம்பிக்காதே... சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பி வா. போயிட்டு வர வழியில சாப்பிடலாம். பத்து நிமிஷத்தில வந்து சேர்ந்திருக்கணும்." கொஞ்சம் அதட்டல்லாக சொல்லி விட்டு சென்றாள் காஞ்சனா!
அம்மாவை கோபமாக முறைத்து விட்டு, அதனால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்து, கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தான் சஞ்சீவ். முகம் கழுவி, பல் துலக்கி, குளித்து முடித்து கிளம்பிய போதும், அவன் மனதில் ஒரே கேள்வி தான் இருந்தது.
ஒரு வேளை, எல்லாம் சரியாக அமைந்து எல்லோருக்கும் இன்று பார்க்க போகும் பெண்ணை பிடித்து விட்டால், வீம்புக்காக அவளை திருமணம் செய்துக் கொள்ள முடியுமா???
இந்த கேள்வியின் கூடவே இந்துவின் முகமும் புன்சிரிப்பும் அவன் கண் முன்னே வந்துப் போனது! கூடவே அவள் அன்று அவனை அறைந்ததும் நினைவில் வந்தது. உடனேயே அவன் கோபமும் சிலுப்
{/f90filter}
பிக் கொண்டது.
இந்துவை சந்திக்கும் வரை அவன் ஒரு தனிக் காட்டு ராஜா போல தான் வாழ்ந்து வந்தான். முதன் முதலாக அவனுடைய வாழ்வில், இந்துவிற்க்காக தான் தன்னை கொஞ்சம் மாற்றி