(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”ஆஆங் சரி சரி போலாம் போலாம்“ என அவனும் அமைதியாக கோயிலுக்குச் சென்றான்.

   

இன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால் கோயிலில் ஏகப்பட்ட கூட்டம், எப்படியும் 7 மணிக்கு பூஜை முடிந்துவிடும். போன முறை சதுர்த்தி வந்த போது தேவாதான் உபயதாரனாக இருந்தான். மாதத்தில் ஒரு முறை அவன் அப்படி செய்வது வழக்கம், இம்முறை இன்னொருவர் எடுத்துக் கொண்டார் அது வேறு யாரும் இல்லை அவனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டாக்டர் குடும்பம்தான். டாக்டர் சுந்தரம்

   

இருவீட்டுக்கும் எப்பொழுதும் ஒத்தே போகாது எலியும் பூனையும் போலவே இருப்பார்கள். தேவாவின் வீட்டில் ஒன்று செய்தால் உடனே டாக்டரும் செய்வார். அது அப்படியே வாடிக்கையானது. இன்று அவர்தான் உபயதாரராக இருந்தார், போன முறை தேவா செய்ததை விட இம்முறை அதிகம் செய்தார். அவருடைய குடும்பமே அங்கு இருந்தது. தேவாவும் அதை பார்த்துவிட்டு அமைதியாக ஒதுங்கிச் சென்றான். 

   

டாக்டர் சுந்தரத்தின் வீடுகூட தேவாவின் வீடு போலவே இருக்கும், பக்கத்து வீடுதான் அவரது, சொந்த வீடு ஒன்று தொலைவில் இருந்தது அதை இடித்து 3 அடுக்கு ஆஸ்பிட்டலாக மாற்றிவிட்டு இந்த வீட்டிற்கு குடிவந்துவிட்டார். அவருக்கும் தேவாவின் தாத்தாவுக்கும் ஏதோ பழைய பகை இருந்ததாம் அதன்காரணமாக டாக்டர் இப்படி நடந்துக் கொள்கிறார் என சொல்லி வைத்தார்கள். அதை தவிர தேவாவுக்கும் எதுவும் தெரியாது.

   

பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வதால் அதை பார்த்துக் கொண்டிருந்தவன் எதேச்சையாக திரும்ப அங்கு விளக்கு வைக்கும் இடத்தில் பெண்களின் கூட்டத்தில் கீர்த்தனாவும் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் சிரித்தவன் தாஸிடம்

   

”தாஸ் இன்னிக்கு நல்ல நாள் விளக்கேத்தலாம், போய் நெய்விளக்கு 2 வாங்கி வா” என சொல்ல அவனும் கோயிலை விட்டு வெளியே சென்றான்.

   

அதற்குள் தேவா விளக்கு வைக்கும் இடத்திற்கு வந்தான். அங்கு டாக்டர் குடும்பத்தில் இருந்த சுந்தரத்தின் மனைவி செந்தாமரையும், அவரது 3 மருமகள்களான பல்லவி, திலகா, கீதா கூட ஒரு இளம் வயது பெண் இருந்தாள். அவளை பார்த்ததும் எங்கோ பார்த்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.